கோவை மாவட்டத்தில் தீவிரமாக நடந்த வாக்கு பதிவு…!
கோவை மாவட்டத்தில் 3540 ஓட்டு சாவடிகளில் வாக்குப்பதிவு இன்று நடந்தது மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
கடந்த இரு மாதம் முன்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இறந்த வாக்காளர்கள், முகவரியில் இல்லாதவர்கள் நீக்கப்பட்டனர். மாவட்ட அளவில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
தற்போது உள்ள பட்டியலில் சரியான வாக்காளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தள் கடந்த காலங்களை விட, இந்த முறை வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர குறிப்பாக கட பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போட ஆர்வத்துடன் குவிந்தனர்.
ஓட்டு பதிவில் சூலூர் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளில் மற்ற தொகுதிகளை காட்டிலும் கூடுதல் சதவீதம் இருந்தது குலூர் கிணத்துக்கடவு பகுதியில் கிராமங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இந்த தொகுதிகளில் காலை முதல் ஓட்டு பதிவு சுறுசுறுப்பாக நடந்தது.
கடைகள் மூடல்;
மாவட்டத்தில் அனைத்து வகையான வியாபார கடைகளும், வணிக வரத்தக கடைகளும் மூடப்பட்டது. பல இடங்களில் உணவகங்களும் மூடப்பட்டது. மாவட்ட அளவில் மக்கள் கூட்டமாக சென்று ஒட்டு போட்டனர். கடைகள் மூடப்பட்டதால் பெரும்பாலான வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
சில இடங்களில் திறக்கப்பட்ட வணிக கடைகளை கட்சியினர் கேட்டு கொண்டதால் மூடி விட்டனர். மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டிருந்தது. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது. பல லட்சம் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்பட்டது.
பஸ்கள் முடங்கியதால் மக்கள் தவிப்பு:
கோவை மாவட்டத்தில் 43 பஸ் டெப்போக்களில் இருந்து இன்று பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. நேற்று இரவு சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் பஸ் கிடைக்காமல் பயணிகள் கடும் கொந்தளிப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் வெளியூரை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இவர்களில் பலர் சொந்த ஊர் சென்று ஓட்டு போட முடியாமல் தவிப்படைந்தனர் புகார் அதிகமான போதும் மிக சொற்ப அளவில் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதேபோல் 75 வயது முதியோர் ஓட்டு போட இலவசமாக அரசு பஸ்களில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. பஸ்கள் கிடைக்காத நிலையில் முதியோர் இந்த சேவையை பயன்படுத்த வாய்ப்பு இல்லாத சூழல் உருவாகி விட்டது.
ஓட்டு போட்டா பிரியாணி:
மாவட்ட அளவில் பல்வேறு கட்சியினர் ஒட்டு போட வந்த வாக்காளர்கள் சிலருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினர் தக்காளி சாதம், தயிர் சாதம், மோர், கூல் டிரிங்க்ஸ் வினியோகமும் நடந்தது. சில இடங்களில் கட்சியினர் பூத் டேபிள் அமைத்து சாமியானா போட்டு வாக்காளர்களுக்கு வழிகாட்டுவதற்காக அமர்ந்திருந்தனர்.
அங்கே கட்சி சின்னங்களை காட்டி ஓட்டு கேட்டது பரவலாக நடந்தது, சிலர் வாக்காளர்களை வீட்டிற்கு சென்று ஓட்டு போட வாகனங்களில் அழைத்து வந்தனர். பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஓட்டு பே கூப்பன் வழங்கப்பட்டது பறக்கும் படையினர் அங்கே சென்று 45 பரிசு கூப்பன்களை பறிமுதல் செய்தனர்.
ஹெல்ப் டெஸ்க் மோசம் மாவட்ட அளவில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் ஹெல்ப் டெஸ்க் என்ற உதவி மையம் அமைக்கப்பட்டது. இதில் பல ஓட்டு சாவடிகளுக்காக வாக்காளர் தகவல் சீட்டுகள் கத்தை கத்தையாக வைக்கப்பட்டிருந்தது. இதில் பாகம் எண், வரிசை எண் பார்த்து தேடி எடுக்க அதிக நேரமானது குறிப்பாக வரக்கு
பதிவு செய்யும் இடத்தை காட்டிலும் வாக்காளர் தகவல் சீட்டு பெறும் இடத்தில் தான் கூட்டம் மிக அதிகமாக ஒரு வாக்காளர் தகவல் சீட்டு பெற 10 முதல் 15 நிமிட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது தேர்தல் பிரிவினர் பிஎல்ஓ மற்றும் உதவியாளர்களை அதிகளவு நியமித்து விரைவாக தகவல் சீட்டு வழங்கியிருக்க வேண்டும். கடந்த ஒரு வாரமாக வாக்காளர் தகவல் சீட்டு வீடு வீடாக வழங்காமல் இருந்து அவற்றை மொத்தமாக சேர்த்து ஓட்டு சாவடி வளாகத்தில் குவித்து வைத்ததால் வாக்காளர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
கோவை நகரில் 1065 ஓட்டு சாவடிகள் இருந்தது. ஓட்டு சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. சில இடங்களில் வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் வாக்காளர்கள் தவிப்படைந்தனர். சில இடங்களில் வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் வாக்குவாதம் ஏற்பட்டது.
