கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு…
கோவை மாவட்டத்தில் நேற்று ஓட்டு பதிவு நடந்தது. மாவட்டத்தில் 1063 வளாகங்களில் 3540 ஓட்டு சாவடிகளில் ஓட்டு பதிவு நடந்தது இந்த ஓட்டு பதிவுகளை கண்காணிக்க கேமரா அமைக்கப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டது.
இதில் காலை 6 மணி முதல் அதிகாரிகள் ஓட்டு சாவடிகளை கண்காணித்தனர். 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 3 துணை கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணி நடத்தப்பட்டது. இதில் ஓட்டு சாவடிகளில் விதிமுறை மீறல் இருக்கிறதா? என 20 அலுவலர்கள் எல்இடி திரையில் ஒட்டு சாவடி காட்சிகளை பார்த்து கொண்டே இருந்தனர்.
விதிமுறை மீறல் தென்பட்ட ஓட்டு சாவடிகள் தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலீசார் சிலர் ஓட்டு சாவடி உள்பகுதியில் இருந்தனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிற்க வேண்டும். ஒட்டு சாவடி உள் பகுதிக்கு செல்ல கூடாது என தேர்தல் பிரிவினர் எச்சரித்து அனுப்பினர்.
மேலும் கட்சியினர், ஏஜன்ட் பாஸ் இல்லாதவர்கள் ஓட்டு சாவடிக்கு சென்று பார்வையிட தடை விதிக்கப்பட்டது. மாவட்ட அளவில் ஒட்டு மெசின்களில் பழுது ஏற்படவில்லை. உரிய நேரத்தில் மாதிரி ஓட்டு பதிவு நடத்தப்பட்டு உண்மையான ஓட்டு பதிவு துவக்கப்பட்டது. ஓட்டு சாவடிகளை கேமரா மூலமாக கண்காணித்து உடனடியாக உத்தரவு வழங்கப்பட்டதால் விதிமுறை மீறல்கள் தடுக்கப்பட்டது.
