கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 84.39 சதவீத வாக்கு பதிவு…!

கோவை மாவட்டத்தில் 27.44 வட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் இன்று ஒட்டு பதிவு நடந்தது.

இந்த தேர்தலில் 6323 ஓட்டு பதிவு மெசின்கள், 4272 கன்ட்ரோல் யூனிட்டுகள், 4623 சின்னம் காட்டும் மெசின்கள் என 15,223 மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த மெசின்கள் அனைத்தும் 330 வாகனங்களில் 3540 ஓட்டு சாவடிகளுக்கு வாகனங்களின் மூலமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு, துணை ராணுவ படை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

மிசின்களுடன் 43 வகையான பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டது. அழியாத மை, டம்மி பேலட் பார்வையற்றவர்களுக்கான பேலட் பேப்பர், ரகசிய பேப்பர்கள் வாக்காளர் சிலிப், டெஸ்ட்வாக்கு படிவம், அரக்கு சீல், ஸ்டேஷனரி பொருட்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டது.

-கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு ஓட்டு சாவடியிலும் ஒரு தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர், 3 உதவி அலுவலர் என 4 பேர் பணியாற்றினர் மாவட்ட அளவில் 17,122 அரசு அலுவலர்கள் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது. இதில் 10 சதவீதம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். ஓட்டு சாவடி அல்லாத பணிகளில் சுமார் 2 ஆயிரம் அலுவலர்கள் பணியில் இருந்தனர்.

சுமார் 20 ஆயிரம் அலுவலர்கள் தேர்தல் பணி செய்தனர் அனைத்து ஓட்டு சாவடிகளும் கண்காணிப்பு கேமரா வெப் காஸ்டிக் முறையிலான கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. C விஜில் சுவிதா செயலி மூலமாக ஓட்டு சாவடிகள், அலுவலர்களின் பணி விவரங்கள் ஆன்லைனில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஓட்டு பதிவு முடிந்ததும் ஓட்டு மெசின்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அனைத்து ஓட்டு சாவடிகளிலும் ஓட்டு பதிவு தடையின்றி நடந்தது. தெற்கு தொகுதிக்கான நிர்மலா கல்லூரி ஓட்டு சாவடியில் ஒரு ஓட்டு மெசினில் பட்டன் சரியாக இயங்கவில்லை. சில நிமிடங்களில் இந்த பட்டன் பிரச்னை சரி செய்யப்பட்டது. ரேஸ்கோர்ஸ் ஓட்டு சாவடியில் மெசின் ஒன்று இயங்கவில்லை.

இந்த மெசினிற்கு மாற்றாக வேறு ஒரு மெசின் பயன்படுத்தப்பட்டது. இதனால் அரை மணி நேரம் ஓட்டு பதிவு பாதிக்கப்பட்டது. மாவட்ட அளவில் காலை நேரத்தில் ஓட்டு பதிவு அதிகமாக நடந்தது. மாலை 5 மணிக்கு பிறகு சில வாக்காளர்கள் ஒட்டு போட வந்திருந்தனர். கூலி வேலைக்கு சென்று விட்டோம்; தாமதமாகி விட்டது எனக்கூறி அவசரமாக வந்து ஒட்டு போட்டனர்.

அனைத்து ஓட்டு சாவடிகளிலும் மாலை 6 மணிக்கு ஒட்டு பதிவு முடிந்தது. மாவட்ட அளவில் 64.39 சதவீத ஓட்டு பதிவானது. ஓட்டு பதிவு முடிந்ததும் அந்த வளாகத்தை போலீசார் மூடி விட்டனர். ஓட்டு மெசின்கள், இதர ஆவணங்கள் சரி பார்த்து பேக்கிங் செய்யப்பட்டு இரவில் வாகனங்களின் மூலமாக ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேர்தல் பிரிவினர் கூறுகையில், “ஓட்டு சாவடிகளில் குறைபாடு, முறைகேடு தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. வாக்காளர்கள் தடையின்றி பயமின்றி தயக்கமின்றி ஒட்டு பதிவு செய்தார்கள். கடந்த காலங்களை விட இது மிக அதிகப்பட்ச ஓட்டு பதிவு. தேர்தல் பிரிவின் பணியால் அதிக சதவீதம் ஒட்டு

பதிவாகியிருக்கிறது. இந்த ஒட்டுக்கள் ஜனநாயகத்திற்கு பெருமையான விசயமாக மாறி இருக்கிறது. ஓட்டு

எண்ணிக்கை மையத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது, என்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த 20160 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 6921 சதவீத ஓட்டு பதிவானது. 44,28,459 வாக்காளர்களில் 30,62,710 பேர் வாக்களித்தனர் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 72.63 சதவீத ஓட்டு பதிவானது, 46 42,226 வாக்காளர்களில் 33,55447 பேர் வாக்கு பதிவு செய்தனர்.

தற்போது உச்ச கட்ட அளவிற்கு ஒட்டு பதிவாகியுள்ளது கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் 6442 சதவீத ஒட்டுக்கள் பதிவானது ஆனால் வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த கேர்தலை விட 6.50 லட்சம் குறைவாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *