கோவையில் போலி வேட்பாளர்களால் பிரச்சனை

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டவர் ராகுல் காந்தி.

இவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில்

நான் போட்டியிட்ட கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் சில சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

இவர்கள் தேர்தல் களத்தில் திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு உதவும் வகையில் செயல்பட்டார்கள். அடையாள அட்டை மற்றும் பூத் ஏஜென்ட் பாஸ் தங்களுக்கு வேண்டப்பட்ட கட்சியினருக்கு பெற்றுத் தரும் வகையில் செயல்பட்டார்கள்.

மேலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளில் இவர்கள் கவுண்டிங் சென்டரில் ஏஜென்ட் பாஸ் வாங்கி பிரச்சினை செய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே இவர்கள் தேர்தல் நேரத்தில் ஓட்டு சாவடி பகுதியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் மேஜையை திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு கொடுத்து விட்டார்கள்.

இதுபோன்ற போலி வேட்பாளர்கள் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பிரச்சனை செய்ய கட்சியின் சார்பில் பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு முன்பு நான் இந்த செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் பார்வையாளரிடம் புகார் மனு கொடுத்திருந்தேன். ஆனால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,”
என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *