கோவை ரயில் நிலையத்தில் 350 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்…

கோவை ரயில்கள் மூலமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக புகார் வந்தது.


இதைத்தொடர்ந்து கோவை ரயில்வே போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வந்தனர் .

நேற்று ரயில்வே பிளாட்பாரம் பகுதியில் நடந்த சோதனையில் 350 கிலோ எடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் குறிப்பாக பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போதை பாக்குகள்
கடத்தி வந்த நபர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றார்கள்.

வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் ரயில்களில் சிலர் போதை பொருட்களை கடத்தி வருவதாகவும் போலீசாரை கண்டதும் அவர்கள் போதை பொருட்களை விட்டு தப்பி செல்வதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *