போதை ஏறி போச்சு…கோவை கலெக்டர் அலுவலகம் பெண் ரகளை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மாலை 50 வயது மதிக்கதக்க பெண் வந்திருந்தார்.

பேண்ட் டீ சர்ட் அணிந்து ஆண் போன்ற தோற்றத்தில் சுற்றிய அவர் திடீரென அங்கேயிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தார் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்,

போலீசார் அங்கே சென்ற போது அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் பீர் பாட்டில் வைத்திருந்தார். மதுவை சிறிது குடித்து விட்டு மீதம் வைத்திருந்தார். போலீசார் அவரிடம் யார் நீங்கள், இங்கே என்ன செய்யறீங்க என விசாரித்த போது அவர் சரியாக பதில் தரவில்லை. நான் ஏன் உங்களிடம் பதில் சொல்ல வேண்டும்.

நான் கடவுளிடம் இருக்கிறேன் என்னை உங்களால் என்ன செய்ய முடியும் எனக்கூறினார். மேலும் போலீசார் வீடியோ பதிவு செய்ய முயன்ற போது அவர்களிடம் தகாத முறையில் பேசி ஆவேசமாக நடந்து கொண்டார். மேலும் போலீசாரிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார்,

போலீசார் அவரை மடக்கி பிடித்து மது பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் பிங்க் பெட்ரோல் வாகனத்தில் அவரை விசாரிக்க அழைத்து செல்ல முயன்ற போது கூச்சலிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் விருது நகர் பகுதியை சேர்ந்த பனிமலர் என்பதும், இவர் கோவையில் உள்ள ஒரு ஆன் மீக வழிபாட்டு தலத்தில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

அவர் விரலில் பாம்பு வடிவ செம்பு மோதிரம், கழுத்தில் ருத்ராட்சை அணிந்திருந்தார். இவர் போதை பயன் படுத்தியதால் நிலை தடுமாறி பேசுவதாகவும் கடும் விரக்தி மன நிலையில் இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *