கோவையில் குடிநீர் பஞ்சம் தடுக்க கலெக்டர் உத்தரவு
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோக பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, ஊராட்சி உதவி இயக்குநர்கள் செந்தில்வேல், பேரூராட்சி உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம், மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு மற்றும் தேவைகள் குறித்தும், இனி வரும் நாட்களில் தேவைப்படும் குடிநீரின் அளவு மற்றும் தேவை ஆகியவை குறித்து கேட்டறிந்து, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில் அப்பணிகளை விரைந்து முடித்து, குடிநீர் விநியோகம் பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின் விநியோகம் தடையின்றி இருக்க வேண்டும். உயர் மின் அழுத்தம், குறைந்த மின் அழுத்தும் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக அதனை நிவர்த்தி செய்து சீரான மின்விநியோகம் செய்ய வேண்டும் என துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
