பிஎல் படிச்ச ஜோசிய டாக்டருங்க… தவெக பெண் எம்எல்ஏ பேட்டி …

கோவை கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி நேற்று மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் நாய்கடி பிரச்னைக்கு, தெரு நாய்கள் பெருகி வருவதை குறைக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும், அரசு மருத்துவமனைகள் 80 சதவீதம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை மற்றும் சில பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றார்.

மருத்துவம் படிக்காமல் டாக்டர் என தனது பெயருக்கு முன்னால் போட்டு கொண்டிருப்பது ஏன்? என நிருபர்கள் கேட்ட போது, “நான் பிஏ பிஎல் படித்திருக்கிறேன். ஜோதிடத்தில் டாக்ட்ரேட் முடித்திருக்கிறேன். நான் லாயர் தான். மெடிசன் படித்த டாக்டராக இருந்தாலும் டாக்டரேட் படித்திருந்தாலும் டாக்டர் என குறிப்பிடுவார்கள். நானும் அந்த வகையில் தான் டாக்டர் என போட்டிருக்கிறேன்.

என்னை டாக்டர் கனிமொழி சந்தோஷ் என குறிப்பிடுகிறார்கள். அது என் புனை பெயராக மாறி விட்டது. நான் மெடிக்கல் சப்ஜெக்ட் அதிகமாக பேசுவேன் என்பதால் டாக்டர் என சொல்கிறார்கள் ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *