கஞ்சா விற்பனை யா?… கோவையில் police checking… !
கோவை நகரில் கஞ்சா விற்பனை களை கட்டி வருகிறது.
அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி, ரயில் பாதை, கூட்செட் ரோடு, ரயில் நிலைய பிளாட்பாரம், அரசு மருத்துவமனை பிளாட்பாரம், அரசு கலைக்கல்லூரி ரோடு, சுங்கம், திருச்சி ரோடு புதிய மேம்பாலத்தின் கீழ் பகுதி, சுங்கம் பைபாஸ். ரோடு, வெரைட்டிஹால் ரோடு, ராம்நகர், காட்டூர், தேவாங்க பேட்டை ரோடு உள்பட 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடக்கிறது.
பிளாட்பார வாசிகள், பிச்சைக்காரர்கள் போல் படுத்து ெகாண்டும், செல்போன் வைத்து படம் பார்த்து கொண்டும் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். பொட்டலம் பொட்டலமாக கை மாறுவதும், சிலர் அங்கேயே கஞ்சாவை சிகரெட்டில் நிரம்பி ஊதுவதும் வாடிக்கையாகி விட்டது. காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ்ஸ்டாண்டில் இரவு பகலாக கஞ்சா வியாபாரம் மும்முரமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
வெளியூர் செல்லும் பஸ்களில் பயணம் செய்பவர்களை குறி வைத்து கஞ்சா சப்ளை செய்து வருகிறார்கள். பஸ் நிறுத்தும் ரேக், கழிவறை வளாகங்களில் கஞ்சா பொட்டலங்களை வைத்து சிலர் விற்பனை செய்வதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். கஞ்சா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பஸ் ஸ்டாண்ட்களில் அதிகளவு கேமரா வைக்கப்பட்டுள்ளது. பிக்பாக்கெட், வழிப்பறி, போதை கும்பல் நடமாட்டத்தை கேமரா மூலமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
