கள்ளகாதல் விவகாரத்தால் கோவையில் டிரைவர் குத்தி கொலையா போலீசார் விசாரணை…!

கோவை ஆர் எஸ் புரம் அருகே உள்ள பட்டுநூல் கார சந்து பகுதியை சேர்ந்தவர் பஷீர் . இவர் மகன் அபுதாகிர் பாஷா (27).

இவர் ஆக்டிங் டிரைவராக பணி செய்து வந்தார். தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து பைனான்ஸ் தொழிலும் நடத்தி வந்ததார்.

கடந்த 29ம் தேதி அபுதாகிர் பாஷா தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் இரவு 8 மணியளவில் அவர் தனது வீட்டின் அருகிலேயே நின்று கொண்டிருந்ததை அவருடைய தாய் பாத்திமா (45) என்பவர் பார்த்துள்ளார். அதற்குப் பிறகு அவர்கள் வீட்டுக்கு வரவில்லை.

அபுதாகிர் பாஷா இரவு 11 மணிக்குள் வீட்டிற்குத் திரும்பி விடுவது வழக்கம். ஆனால் அன்றைய தினம் நள்ளிரவு வரை வீட்டிற்கு வரவில்லை.அவரது குடும்பத்தினர் அவர் கட்டாயம் வருவார் என காத்திருந்தனர்.

ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரது செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு பேச முயன்றனர். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த தாய் பாத்திமா, தனது மகனைப் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால் ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாயமான அபுதாகிர் பாஷாவைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது சிரியன் சர்ச்ரோடு பகுதியில் சாக்கடையில் ஆண் பிணம் ஒன்று எரிந்து நிலையில் கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அது மாயமான அபுதாஹிர் பாஷா என்பது தெரிவந்தது. மேலும் அவரது வயிற்றில் கத்தி கருத்து காயம் இருந்துள்ளது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையை யார் செய்தது அபுதாகிர் பாஷாவை அழைத்துச் சென்றது யார் என்ன பிரச்சனை ஏற்பட்டது என அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் அபுதாகிர் பாஷாவிற்கு திருமணம் ஆகி மனைவி பெங்களூரில் இருப்பதாகவும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது இந்த நிலையில் அபுதாகிர் பாஷா பல்வேறு பெண்களுடன் பேசி வந்துள்ளதாகவும் அவருக்கு பல்வேறு நபர்கள் மிரட்டல் விடுத்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.

செல்போனில் அவரை யாரோ தொடர்ந்து மிரட்டியதால் அவர் கோபமாக பேசியுள்ளார் அதற்கு பிறகு அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் போலீசார் அவரது செல்போன் தொடர்புகளில் உள்ள நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அபுதாகிர் பாஷாவிற்கு காதலி ஒருவர் இருந்துள்ளதாக தெரிகிறது அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *