கோவையில் பாலியல் கொலையாளி கார்த்திக்கிடம் விரைவில் கஸ்டடி விசாரணை

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கட்டட தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த விவகாரத்தில் கார்த்திக் நண்பர் மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கார்த்திக் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைப்புச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்திருப்பதாக தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் போலீஸ் விசாரணையின் போது போலீஸில் இருந்து தப்ப முயன்றார். அப்போது அவர் மாடியில் இருந்து கீழே குதித்த போது வலது கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார்.

இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .

அவர் அடைக்கப்பட்ட அறையில் இருந்த இதர கைதிகள் நான்கு பேர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினார். இதில் அவரது கண் மற்றும் உடலில் பல்வேறு பாகங்களில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த நிலையில் சூலூர் போலீசார் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை கஸ்டடி எடுத்து விசாரணை செய்வதற்காக கோவை போக்சோ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

ஐந்து நாட்கள் விசாரணை நடத்த வேண்டும். இதற்கு கஸ்டடி அனுமதி வழங்க வேண்டும் என போலீசார் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது . விரைவில் இந்த கஸ்டடி மனு தொடர்பான விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சிகிச்சையில் இருப்பதால் அவருக்கு உடனடியாக கஸ்டடி வழங்கப்படுமா என தெரியவில்லை. இருப்பினும் போலீசார் கஸ்டடி விசாரணையை தீவிரமாக முடிக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *