Kovai monsoon: தென் பருவ மழை பாதிப்பு தடுக்க ஆலோசனை…
meeting துவங்கும் முன் அதிகாரிகள் போன் chatting…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் பழனிகுமார், ஆர்டீஓ மாருதிபிரியா, வினோத்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனைத்து அரசுத்துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பொதுப்பணித்துறை சார்பில் நீர் தேக்கம் உள்ள பகுதிகளில் போதுமான கட்டமைப்பு செய்திருக்க வேண்டும். தடுப்பணை, குளம், வாய்க்கால் அனைத்தும் மழை நீர் செல்லும் வகையில் சீரான நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மழை நீர் முழு அளவில் நீர் தேக்கங்களில் தேக்கி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகாமல் தடுப்பதற்கு தேவையான மணல் முட்டைகள் மற்றும் பல்வேறு ஆயத்தை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினர் பாலம் மற்றும் தரை மட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கா மல் தடுக்க பாதுகாப்பு வசதிகளை செய்ய வேண்டும்.
ரோடு, பாலம் தரமான நிலைமையில் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். பழுதான ரோடு பாலங்களை உடனடியாக சீரமைப்பு செய்ய வேண்டும். மழைநீர் வடிகால் பராமரிப்பில் இருக்கிறதா என கண்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வேளாண் துறையினர் பயிர் பாதுகாப்பு, மழை காற்றின் காரணமாக வாழை மற்றும் பல்வேறு பயிர்கள் பாதிக்கக்கூடிய நிலைமை இருந்தால் அது தொடர்பாக கவனித்து விவசாயிகளுக்கு தேவையான ஆவோசனை வழங்க வேண்டும். மின்வாரியத்தினர் மின்கம்பங்கள் மற்றும் மின் ஒயர்களை சரியான முறையில் பராமரித்து வைக்க வேண்டும்.
மின்தடை செய்யக்கூடாது. மின் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். உணவு வழங்கல் பிரிவினர் ரேஷன் பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதிக மழை பாதிப்பு வந்தால் பொது மக்களுக்கு குறிப்பாக குடிசை பகுதியில்
வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை அருகே உள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தென்மேற்கு பருவமழையினால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது அந்தந்த உள்ளாட்சி பகுதிகளில் அனைத்துத் துறையினர் சார்பில் மழை கால
பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கோவை மாநகராட்சியில் வடிகால்கள், தாழ்வான பகுதிகளில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதை தடுக்க வேண்டும். நகரில் முக்கிய பாலங்களில் நீர் தேங்குவதை தடுக்க பணி செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டது.
