கொடூரமாக கொலை செய்தது எப்படி… Coimbatore minor girl வழக்கில் போலீசார் கஷ்டடி விசாரணை…!
கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கட்டட தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த விவகாரத்தில் கார்த்திக் நண்பர் மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கார்த்திக் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைப்புச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்திருப்பதாக தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் போலீஸ் விசாரணையின் போது போலீஸில் இருந்து தப்ப முயன்றார். அப்போது அவர் மாடியில் இருந்து கீழே குதித்த போது வலது கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார்.
இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .அவர் அடைக்கப்பட்ட அறையில் இருந்த இதர கைதிகள் நான்கு பேர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினார். இதில் அவரது கண் மற்றும் உடலில் பல்வேறு பாகங்களில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த நிலையில் சூலூர் போலீசார் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை கஸ்டடி எடுத்து விசாரணை செய்வதற்காக கோவை போக்சோ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
ஐந்து நாட்கள் விசாரணை நடத்த வேண்டும். இதற்கு கஸ்டடி அனுமதி வழங்க வேண்டும் என போலீசார் தரப்பில் கேட்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கோர்ட்டில் கஸ்டடி மனு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று நாட்கள் கஸ்டடியில் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து போலீசார் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த குளக்கரை பகுதிக்கு கார்த்திக்கை அழைத்துச் சென்று எப்படி கொலை செய்தார் .
சடலத்தை எப்படி அப்புறப்படுத்தினார் என்பது தொடர்பாக வீடியோ பதிவுகளுடன் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
