ரூ.1876 கோடியில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு 6 வழி பாதை… ஜனவரியில் பணி துவக்கம்

கோவையில் கடந்த 1999 ஆண்டில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு போடப்பட்டது.

இது தான் கோவை கேரளாவுக்கான முக்கிய இணைப்பு பாதையாக இருக்கிறது. இந்த பைபாஸ் ரோட்டில் சுங்க கட்டணம் வசூல் 5 மையங்களில் இருந்தது. கடந்த சில மாதம் முன் சுங்கம் வசூல் நிறுத்தப்பட்டது. மதுக்கரையில் மட்டும் சுங்க கட்டணம் பெறப்பட்டுகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் (நகாய்) சார்பில் இந்த பைபாஸ் ரோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பைபாஸ் பேராட்டில் வாகன நெருக்கம் அதிகமாகி விட்டது. 26.2 கி.மீ தூர பைபாஸ் ரோட்டை கனகர வாகனங்கள் கடந்து செல்ல 2 முதல் 3 மணி நேரமாகிறது. பீக் அவர்ஸ்களில் மேலும் பல நிமிடங்கள் வாகனங்கள் காத்திருக்கும் நிலைமை இருக்கிறது. இது தொடர்பாக ஆய்வு நடத்திய நெடுஞ்சாலை ஆணையகம் மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் விரிவாக்கம் செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டது.

இதில் திட்ட அறிக்கை (டிராப்ட் டிபிஆர்) தயார் செய்யப்பட்டது இதில் 26.2 கி.மீ தூரம பைபாஸ் ரோடு விரிவாக்கம் செய்ய உத்தேசமாக 1876 கோடி ரூபாய் செலவாகும் என தெரியவந்தது.

கட்டுமான பணிக்கு 1066 கோடி ரூபாய், கட்டமைப்பு மாற்ற 150 கோடி ரூபாய், கட்டுமான பணிக்கான ஆயத்த பணிகளுக்கு 151 கோடி ரூபாய், நிர்வாக செலாக 224 கோடி ரூபாய், நிலம் கையகப்படுத்த 65 கோடி ரூபாய், ஜிஎஸ்டியாக 218 கோடி ரூபாய் செலவாகும் என தெரிகிறது.

கட்டுமான பொருட்களின் விலைக்கு ஏற்ப கூடுதலாக 10 சதவீத தொகை செலவாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு 6 வழிப்பாதையாக அமையும். அதாவது கோவை அவினாசி ரோடு போல் அமைக்கப்படும். சென்டர் மீடியன் யன் பகுதி மட்டும் சற்று சிறியதாக இருக்கும்.

சிந்தாமணிப்புதூர், கற்பகம் கல்லூரி சந்திப்பு சிக்னல் பகுதியில் பிரமாண்டமாக 2 மேம்பாலங்கள் அமைக்கப்படும். இருகூர், செட்டிபாளையம் ரயில் பாதை சந்திப்பிலும் உயர் மட்ட பாலம் அமைக்கப்படும்.

இதில் இடது பக்கம் அதாவது கேரளா நோக்கி செல்லும் பகுதி மட்டும் 4 வழிப்பாதையாக இருக்கிறது. வலது பக்கம் 3 வழிப்பாதையாக அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக மேம்பாலங்கள் அமையும் பகுதி வழிப்பாதையாக அமையும் இது தவிர பட்டணம், வெள்ளலூர் ரோடு என சில முக்கிய சந்திப்பு இடங்களிலும் மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளது.

இதற்காக சில இடங்களில் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. திட்ட பாதையில் 12 மேம்பாலம் அமைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மேம்பாலங்கள், ரோடு அமைப்பு, வளைவு, மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்கள், வாகன நெருக்கம், வாகனங்கள் சந்திப்பு இடங்கள் தொடர்பாக நெடுஞ்சாலை ஆணையகம் கூகுள் எர்த் மூலமாக தகவல்களை சேகரித்து வருகிறது.

மேலும் கூகுள் எர்த் மூலமாக தினசரி வாகனங்களின் இயக்கம், பாதிப்பு உள்ள பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ரோடு விரிவாக்கம் செய்ய வரும் நவம்பர் மாதம் டெண்டர் வெளியிடப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திட்ட பணிகள் துவக்கப்படவுள்ளது.

இந்த ரோடு விரிவாக்க பணிகள் 2.5 ஆண்டுகள் நடத்தப்படும். கடந்த 1999ம் ஆண்டில் கட்டி இயக்குதல் (பிஓடி) முறையில் பைபாஸ் ரோடு போடப்பட்டது.

இந்த முறை ஹாம் என அழைக்கப்படும் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான முறையில் பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை ஆணையகம் 40 சதவீதம், திட்டம் செய்யும் நிறுவனம் 30 சதவீதம் என்ற முறையில் திட்ட தொகை செலவிடப்படவுள்ளது.

இந்த முறையிலான திட்டத்திற்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது எத்தனை இடம் என முடிவாகவில்லை. மேலும் 33 எக்டர் நிலம் கையகப்படுத்த 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்ட பணிகள் நடத்துவதற்கான நிதியை ஸ்டேட் பைனான்ஸ் கமிஷன் (எஸ்எப்சி) மூலமாக பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பைபாஸ் ரோட்டில் கெயில் நிறுவனத்தின் பைப் லைன் இருக்கிறது. இது தவிர இந்தியன ஆயில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின பிளான்ட், பைப் லைன் அமைந்துள்ளது. இந்த நிறுவனங்களின் பைப் லைன் மாற்ற பைபாஸ் ரோடு விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்க கடிதம் தரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தின் கடிதம் தாமதமாகி வருகிறது.

இதேபோல் இருகூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள ரயில்வே பகுதியில் பணி நடத்த அனுமதி வழங்க கடந்த 13-01-2026ம தேதி அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. 23-03-2026ம் தேதி இரு தரப்பு ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் 3 மாதமாக ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்காமல் ளமல் அனுமதி உத்தரவை கிடப்பில் போட்டதாக போட்டதாக தெரியவந்துள்ளது.

பில்லூர், சிறுவாணி குடிநீர் வாரியமும் குடிநீர குழாய்களை மாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கவில்லை. மதுக்கரை நகராட்சி, பள்ளபாளையம் சூலூர் பஞ்சாயத்துகளிலும் பணி நடத்த தடையின்மை சான்று கிடைக்கவில்லை. திட்ட பணிகளுக்கு மரங்களை வெட்ட பசுமை இயக்கத்தின் அனுமதி மறுக்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டில் இந்த வழிதடத்தில் 681 விபத்து வழக்கு பதிவானது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. விபத்தில் 5 ஆண்டில் 199 பேர் இறந்தனர். 482 பேர் காயமடைந்தனர். 4 இடங்கள் பிளாக் ஸ்பாட் என அடையாளம் காணப்பட்டது. தினசரி வாகன இயக்கம் 40 ஆயிரம் என கண்டறியப்பட்டுள்ளது. 54 இடங்களில் சிறுபாலம், 24 இடங்களில் பஸ் ஷெல்டர், 2 இடத்தில் நடை மேம்பாலம் ஒரு இடத்தில் நடைபாதை கீழ் பாலம் அமைக்கப்படும் என நெடுஞ்சாலை ஆணையக திட்ட இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *