கோவையில் ஸ்டார்ட் அப் மண்டலம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.

இதில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில், உலகளாவிய முதலீடு மற்றும் ஸ்டார்ட் அப் சார்ந்த நிறுவனங்களுக்கு சிறப்பு மண்டலம் அமைத்தல், மேற்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த சர்வதேச பூங்கா அமைத்தல், சரக்கு போக்குவரத்து கிடங்கு மற்றும் ஏற்றுமதி வசதிகள் ஒருங்கிணைத்தல், நொய்யல் நதி மறுசீரமைப்பு மற்றும் நிதி மேம்பாட்டுத் திட்டம்,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மையம் அமைத்தல், தொழிற்துறை தேவைக்கேற்ப இளைஞர்களுக்கு பயிற்சி, மின்சார வாகனம் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைத்தல், புதிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்குதல், ஒருங்கிணைந்த வேளாண் மதிப்புகூட்டல் பூங்கா அமைத்தல், தேங்காய், காய்கறி பழங்கள் மற்றும் மலர்பொருட்களை பதப்படுத்துதல்,

வால்பாறை, டாப்சிலிப் சர்வதேச சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் – உலகத்தர சுற்றுலா வசதிகள், கோயமுத்தூர் மாநகர பசுமை வளைய சாலை போக்குவரத்து நெரிசலை குறைத்து தொழில் வளர்ச்சிக்கு உதவுதல், மகளிர் தொழில் முனைவோர் சிறப்பு பொருளாதா மண்டலம் அமைத்தல் பெண்கள் தொழில் துவங்குவதற்கான அடிப்படை வசதிகள், நிதி ஆதாரங்கள் ஏற்படுத்துதல்,

கோவை சர்வதேச கண்காட்சி மற்றும் வர்த்தக மையம் அமைத்தல், தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீடு மாநாடுகளை நடத்த நிரந்தர வளாகம் அமைத்தல் உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அந்தந்த துறை தொடர்புடைய அலுவலர்கள் தங்களது கருத்துக்கள்,

செயல் திட்டங்களை தயார் செய்து வழங்க வேண்டும். அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். மேலும், அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்வதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என இந்த கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *