ஸ்கூட்டர் மானியம் கிடைக்கல..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுண்டக்கா முத்தூர் பகுதியை சேர்ந்த டீ வியாபாரி கிருஷ்ணசாமி என்பவர் தன் மனைவி பெயரில் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க அரசு துறையில் அனுமதி வழங்கப்பட்டது. ஸ்கூட்டர் வாங்கிய பின்னர் அனுமதி உத்தரவு இருந்தும் 25 ஆயிரம் ரூபாய் மானிய தொகை வழங்கப்படவில்லை. அரசாங்கம் மானியத் தொகை தரும் என சொந்தக் காசில் ஸ்கூட்டர் வாங்கி விட்டோம். இப்போது மானியம் தர மறுக்கிறார்கள். நான்கு ஆண்டாக அலைந்து ஏமாந்து போய் விட்டோம். எனவேதான் தற்கொலை செய்யும் நோக்கத்தில் கலெக்டர் அலுவலகம் வந்தேன். போலீசார் கெரசினை பறிமுதல் செய்து விட்டார்கள் என புலம்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *