வெடிகுண்டு தேடிப் போனா சைனா பட்டாசு..
கோவை சாய்பாபா காலனி ராஜா அண்ணாமலை தெருவில் ஒரு ஓட்டல் முன்பு வெடிகுண்டு இருப்பதாக புகார் இருந்தது. சாய்பாபா காலனி போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் இன்று காலை அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பிளாஸ்டிக் கவரில் வெடிகுண்டு போல் ஒரு பொருள் கிடந்தது. அதை பரிசோதனை செய்து பார்த்தபோது அது சைனா பட்டாசு என தெரிவிக்கின்றது. யாரோ வெடிக்காத பட்டாசை தூக்கி வீசி சென்றிருந்தனர். இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு என நினைத்து பீதியை கிளப்பி விட்டார்கள். போலீசார் சோதனைக்கு பிறகு அந்தப் பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
