கோவை ஏர்போர்ட் விரிவாக்க பணிகளுக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு
கோவை விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிப் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
விமான நிலைய விரிவாக்க மாஸ்டர் பிளானுக்கு தேவையான 627 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (AAI) ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது, விமான நிலைய உள்நாட்டு பாதுகாப்பு சோதனை பகுதி உள்ளிட்ட இடங்களில் விரிவாக்கப் பணிகள் நடக்கிறது. விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படுவதால், பணிகளை உரிய நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் உள்நாட்டு பாதுகாப்பு சோதனை பகுதியில் துாண்கள். அமைக்கும் பணிகள் முடிக்கப்படும்.
பணிகள் நிறைவடைந்ததும் பயணிகள் பயன்பாட்டுக்காக கூடுதலாக 1,000 சதுர மீட்டர் இடவசதி கிடைக்கும். இது தற்காலிக ஏற்பாடாக இருக்கும். கோவை விமான நிலையத்தின் வடிவமைப்பு அடிப்படையிலான பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 36.3 லட்சமாக இருக்கிறது. தற்போது ஆண்டிற்கு சுமார் 35 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், இந்த தற்காலிக ஏற்பாடு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உதவும்.
நிரந்தரத் தீர்வாக, ஆண்டுக்கு 1.2 கோடி பயணிகளை கையாளும் சிறன் கொண்ட புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய முனையத்தின் பரப்பளவு 18,000 சதுர மீட்டராக உள்ள நிலையில், புதிய முனையம் 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும். தற்போது, பீக் அவர்ஸ் நேரத்தில் 1,770 பயணிகளை கையாளும் திறன் உள்ளது. புதிய முனையம் அமைந்தால், பீக் அவர் நேரத்தில் 4,200 பயணிகளை கையாள முடியும். இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் ரூ.2,132 கோடி மதிப்பில் புதிய முனையம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தப் பணிகளை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அனுமதிகள் தேவைப்படுகின்றன. சுற்றுச்சூழல் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கட்டம் நிறைவடைந்துள்ளது. இரண்டாவது கட்டத்தில், மாறில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமான சீயா ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை A சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பயணிகளுக்கு சிறந்த சேவை பாதுகாப்பு, தூய்மை மற்றும் மரியாதையான அணுகுமுறையை வழங்கும் நோக்கில், வரும் 24 முதல் அக்டோபர் 17ம் தேதி வரை யாத்ரி சேவா அபியான் இயக்கம் நடத்தப்படுகிறது. விமான நிலையங்களில் துாய்மை, பாதுகாப்பு, அணுகல் வசதி மற்றும் பயணியர் சேவைகளை மேம்படுத்துதல் பயணிகள் தகவல், வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துதல்.
மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் முதல் முறையாக விமானத்தில் பயணிப்போருக்கு கூடுதல் வசதிகள் வழங்குதல் சிறப்பாக பணியாற்றும் முன்கள ஊழியர்களை பாராட்டுதல் பயணிகளிடம் மரியாதை மற்றும் அக்கறையுடன் சேவை செய்யும் பண்பை ஊக்குவித்தல் மேற்கொள்ளப்படும்.

I’ve been looking for a reliable spot to play and this one really hits the mark. The interface is smooth and the payouts are surprisingly fast. Definitely my new go-to place for some action! brsorte26bet