கோவை குளங்களில் ஆபத்தான டேங்க் கிளீனர் மீன்கள் அதிகரிப்பு….

கோவை உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் போன்ற பல்வேறு குளங்களில் டேங்க் கிளீனர் (PLECO FISH) என அழைக்கப்படும் கெளுத்தி வகை மீன்கள் அதிகரித்து விட்டது.

மீனவர்களின் வலையில் இந்த மீன்கள் கூட்டம் கூட்டமாக சிக்குகின்றன. இந்த மீன்களை சாப்பிடக்கூடாது. இதய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மீன்கள் ஆபத்தான, அபாயகரமான மீன்களாக இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களைபோல் இவை ஆபத்தானவை.

வீடுகளில் தொட்டிகளில் உள்ள அழுக்கு, கிருமிகளை சுத்தம் செய்ய இந்த டேங்க் கிளீனர் மீன்களை பயன்படுத்துகிறார்கள். பின்னர் இவற்றை குளங்களில் விடுகிறார்கள். இந்த மீன்கள் அபரிமிதமாக கிலோ கணக்கில் வளர்க்கின்றன.

வேதி பொருட்கள், குப்பை, அசுத்தம் சாப்பிடும் இந்த மீன்கள் சில நேரங்களில் மற்ற மீன்களையும் சாப்பிட்டு அழிக்கின்றன. இந்த மீன்கள் நகர், புறநகர் குளங்களில் அதிகளவு வளர்ந்து கிடப்பதாக தெரிகிறது. மீனவர்கள் எப்போது வலை வீசினாலும் இந்த மீன்கள் கூட்டமாக சிக்குகின்றன. விற்பனைக்கு யாரும் வாங்காத இந்த மீன்களை அப்படியே குளக்கரை, ரோட்டில், குப்பைத்தொட்டியில் போட்டு செல்கிறார்கள்.

இந்த மீன்கள் சீக்கிரம் இறப்பதில்லை. ரோட்டில் துள்ளி குதித்து பல நிமிட நேரம் இவை உயிருடன் இருக்கின்றன. இவற்றின் ஆபத்து தெரியாமல் சிலர், எடுத்து சென்று சமைத்து சாப்பிடுகிறார்கள். கோவை குளங்களில் நல்ல மீன்களை அழிக்கும் வல்லமை கொண்ட இந்த அழிவு மீன்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 thoughts on “கோவை குளங்களில் ஆபத்தான டேங்க் கிளீனர் மீன்கள் அதிகரிப்பு….”

  1. Honestly, this is one of the most stable sites I have used recently. The loading speed is great and the interface is very friendly for beginners. Highly recommend phjljl7777 for anyone looking for a smooth experience!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *