கோவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு…

ஆயுத பூஜையையொட்டி கோவையில் பூக்கள், பழங்கள், மலர் மாலைகள் விற்பனை களை கட்டியது.

இதையடுத்து இன்று முதல் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் பூக்கள் வாங்க கோவை பூ மார்க்கெட்டில் வந்தனர் இதனால் பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை பூ கிலோ ரூ. 1,200க்கும், முல்லை பூ ரூ. 950க்கும் விற்பனையானது. குறிப்பாக செவ்வந்தி செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் வழக்கத்தை விட அதிகமாக விற்பனையானது.

வியாபாரிகள் கூறுகையில், “பூ மார்க்கெட்டில் 1 கிலோ செவ்வந்தி ரூ.320-க்கும், அரளி ரூ.300, சம்பங்கி ரூ.200, மல்லிகைப் பூ ரூ.1,200, முல்லைப் பூ ரூ.950 வரையும், கோழிக்கொண்டை ரூ. 120க்கும் விற்பனையானது, மரிக்கொழுந்து கட்டு ஒன்று ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது” என்றனர்.

3 thoughts on “கோவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *