கோவை பாரதி பார்க்கில் 102 ஆண்டு குடிநீர் தொட்டி உடைந்தது
: கோவை பாரதி பார்க் ரோட்டில் கடந்த 1924 ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இருந்த கோஷன் என்பவரால் பனகல் குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது. இதற்காக பாரதி பார்க் ரோட்டில் பிரம்மாண்டமான தரைமட்ட நீர் தொட்டி கட்டப்பட்டது.
இதில், 100 மில்லியன் குடிநீர் தேக்கும் வகையில் நீர் தொட்டி உருவாக்கப்பட்டது. சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் பெறப்பட்டு குழாய் மூலமாக கொண்டு தரை மட்ட தொட்டியில் தேக்கி இங்கே இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது சிறுவாணி திட்டம் என பெயர் வைக்கப்படவில்லை.
பனகல் என்ற பெயரில் இந்த திட்டத்தை அழைத்து வந்தனர். 102 ஆண்டுகள் கடந்த இந்த குடிநீர் தொட்டி சமீபகாலமாக பயன்படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டது. தரைமட்ட நீர் தொட்டி சுத்தம் செய்வதில் பல்வேறு பிரச்னைகள் இருந்ததாகவும் மேல் பகுதி பராமரிப்பு பணி எதுவும் செய்யாமல் உடைந்து விழுந்து விட்டதாகவும் தெரியவந்தது.
மேலும், நீர் கொண்டு வரும் 1000 மி.மீட்டர் விட்டம் கொண்ட குழாயும் பயன்பாடின்றி கிடக்கிறது. தரை மட்ட தொட்டியில் நீர்க்கசிவு எதுவும் இல்லை. ஆனால், தொட்டியின் மேல் பகுதியில் மட்டும் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து விட்டது. இந்த கான்கிரீட் தளத்தை முறையாக பராமரிக்காமல் விட்டதால் உடைந்து விழுந்து விட்டதாக தெரிகிறது.
100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்த பனகல் நீர் தொட்டி திட்டம் கோவையின் வரலாற்று அடையாளமாக இருந்தது. நல்ல நிலையில் இருந்த திட்டத்தை முறையாக பராமரிக்காமல் மாநகராட்சி நிர்வாகம் முடங்கி விட்டது. இப்போதைய கால கட்டத்தில் இதுபோன்ற நீர் தொட்டி கட்ட 50 கோடி ரூபாய்க்கு அதிகமாக செலவாகும் நிலையிருக்கிறது.
கோவை நகரில் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்காக பாரதி பார்க்கில் தரை மட்ட தொட்டி அருகே புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. 55 லட்சம் லிட்டர் நீர் தேக்க திறன் கொண்ட இந்த தொட்டி சுமார் 46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. திறப்பு விழா செய்த பின்னரும் பணி முடியவில்லை. இங்கே வடமாநில தொழிலாளர்கள் இரவு பகலாக தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.
இதில், சிறுவாணி குடிநீரை தேக்கி வைத்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யும் பணி ஏற்கனவே துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது குடிநீர் சப்ளை குறைவாக இருக்கிறது. கடந்த காலங்களில் கோஷன் பார்க், பனகல் நீர் திட்டம் என்ற பெயர்கள் கால போக்கில் மாறி விட்டது. பாரதி பார்க் என 30 ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பனகல் குடிநீர் திட்டத்திற்கு அடையாளமாக பாரதி பார்க்கில் இன்னும் கோஷன் திறந்த கல் வெட்டில் அடையாளமாக இருக்கிறது.

Top notch service and the registration process was a breeze. I had a great run last night. Head over to idmagnum188 and see for yourself!
The customer support team is top-notch. They helped me solve my deposit issue in minutes. Great service and a great platform at pkmintx1.