சிறுவாணி அணை சீரமைப்பு பணி நடத்த கேரளா தாமதம்
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி .
தற்போது அணையின் நீர் மட்டம் 32 அடியாக இருக்கிறது. அணையின் நீர் தேக்க பகுதியில் தற்போது கணிசமான அளவு மழை பெய்து வருகிறது. கடந்த தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனது. தற்போதைய சீசனில் மழை அதிகமாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது வறட்சியான ஆண்டாக கருதப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் குறைந்த பட்ச அளவிற்கு மட்டுமே இருப்பதால் குடிநீர் எடுப்பது குறைக்கப்பட்டுள்ளது. தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெற அனுமதி உள்ளது. ஆனால் குடிநீர் பற்றாக்குறையால் தற்போது தினமும் 55 லட்சம் லிட்டர் மட்டுமே குடிநீர் பெறப்பட்டு வருகிறது.
அணையில் பராமரிப்பு பணிகள் நடத்துவதற்காக கேரளா அரசிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அணை பராமரிப்பு பொறுப்பு கேரளா அரசிடம் இருப்பதால் பணிகளை கேரளா அரசு மேற்கொள்ள இருக்கிறது.அணையில் நீர்க்கசிவு இருப்பதால் அதை தடுக்கும் வகையில் பணிகள் நடத்துவதற்கு 64 கோடி தர வேண்டும் என கேரளா அரசு கேட்டுள்ளது.
ஆனால் முதல் கட்டமாக 20 கோடி ரூபாய் செலவில் பணியில் நடத்துவதற்கு தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. நிர்வாக அனுமதி பெற்று திட்ட வடிவம் தயாரித்து பணிகள் நடத்த கேரள அரசு தாமதம் செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து குடிநீர் வாரியத்தினர் பணிகள் துவக்க வலியுறுத்தி வருகின்றனர்.
அணையின் பக்க சுவர் அபாய கரமாக இருக்கிறது. நீர்கசிவு, விரிசல் அதிகமாகி விடும். விரைவாக பணி நடத்த வேண்டும். அதுவும் நீர் மட்டம் குறைவாக இருக்கும் போது பணிகளை விரைவாக எளிதாக செய்ய முடியும். நிதி தந்தும் கேரள அரசு தாமதம் செய்யக் கூடாது என குடிநீர் வாரியத்தினர் தெரிவித்தனர்.

The registration process was a breeze and I was able to start playing in under two minutes. Everything feels very professional here at jilibet88loginregister