கோவையில் ஜமாபந்தியில் 10,000 விண்ணப்பங்கள் குவிந்தது…

கோவை மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த 16ம்தேதி துவங்கியது.

மதுக்கரை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் முகாம் நடத்தப்பட்டது. கோவை வடக்கு தாலுகா தவிர அனைத்து தாலூகாவிலும் இன்றுடன் முகாம் நிறைவு பெற்றது. வடக்கு தாலூகாவில் வரும் 25ம் தேதி வரையில் முகாம் நடக்கவுள்ளது.

பட்டா மாறுதல், பட்டா பிழை திருத்தம், சப் டிவிசன் செய்தல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை, நில அளவை தொடர்பாக விண்ணப்ப மனுக்களை வழங்கினர்.

குறிப்பாக, இலவச மனை பட்டா கேட்டு பெண்கள் அதிகளவு மனுக்கள் குவித்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு ஆய்வில் இருக்கிறது. ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமாக மனு கொடுத்திருந்தனர். மகளிர் உரிமை தொகை கேட்டு அதிக பெண்கள் கூட்டமாக மனு அளித்தனர்.

கடந்த காலங்களில் நிராகரிக்கப்பட்ட மனுக்களுடன் பெண்கள் பலர் திரும்ப வந்திருந்தனர். கடந்த ஒரு மாதத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் மகளிர் உரிமை தொகை பெற கூடுதல் நபர்கள் சேர்க்கப்படவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் இருந்த எண்ணிக்கையே தற்போதும் நீடிக்கிறது. நிதி நிலைமை கருதி கூடுதல் நபர்களுக்கு மகளிர் உரிமை வழங்க ஒப்புதல் தரவில்லை என சமூக பாதுகாப்பு (திட்டத்தினர் தெரிவித்தனர்.

இதேபோல் இலவச மனை பட்டா கேட்டவர்களுக்கு அரசு இடமில்லை எனக்கூறி கைவிரித்து விட்டனர். ஏற்கனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாமில் மனு அளித்தவர்கள் மீண்டும் தாலுகா அளவில் ஜமாபந்தியில் மனு அளித்திருந்தனர். அதிகாரிகள் வழக்கம் போல் மனுக்களை வாங்கி வைத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

இதில் ஏற்பது, நிராகரிப்பது, நிறைவேற்றுவது என எந்த முடிவும் இதுவரை அதிகாரிகள் செய்யவில்லை. இன்று கடைசி நாள் முகாமிற்கு பிறகு ஆய்வு கூட்டம் நடத்தி தீர்வு காண வருவாய்த்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *