லைசென்ஸ் பதிவிறக்கம்… ஆர்டிஓ ஆபீஸ் களில் உதவி மையம் துவக்கம்
டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவுச்சான்றிதழ் வழங்குவது ஆன்லைன் மயமாக்கப் பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இது தொடர்பான நடைமுறையை தெரிந்து கொள்ளும் வகையில் கோவை ஆர்டிஓ அலுவலகங்களில் உதவி மையம் துவங்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 15-ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழை அச்சு வடிவத்துக்கு பதிலாக டி ஜிட்டல் வடிவில் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. அதன்படி டிஜிட் டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் டிஜிட்டல் வாகனப் பதிவுச் சான்றிதழை முறையே சாரதி மற்றும் வாஹன் இணையதளங்கள் மூலமாகவும் டிஜிலாக்கர் மற்றும் எம் பரிவாஹன் கைப்பேசி செயலிகள் மூலமாகவும் பொதுமக்கள் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்
இந்த நடைமுறையை பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்க போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை வடக்கு, தெற்கு, மையம், மேற்கு, சூலூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் உதவி மையங்கள் துவங்கப்பட்டு உள்ளன.
இந்த மையத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வழிமுறைகள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், சாரதி இணையதளம் மூலம் டிஜிட்டல் ஒட்டுநர் உரிமத்தை பதிவிறக்கம் செய்வது, ஓட்டுநர் உரிமத்தில் கைபேசி எண்ணை அப்டேட் செய்வது, ஓட்டுநர் உரிமம் தொடர்பான விண்ணப்பட எண்ணை கண்டறிவது, வாஹன் இணையதளம் மூலம் டிஜிட்டல் பதிவுச்சான்றிதழை பதி விறக்கம் செய்வது,
வாகன உரிமையாளரின் கைபேசி எண்ணை அப்டேட் செய்வது, டிஜி லாக்கர் மற்றும் எம்பரிவாஹன் கைபேசி செயலி மூலம் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழை பதிவிறக்கம் அல் லது அணுகுவது தொடர்பான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, பொதுமக்களுக்கு உதவும் வகையில் உதவி மையத்திற்கு என தனியாக அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், டிரைவிங் லைசென்ஸ், வாகனப்பதிவு சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.

Super easy to register and start playing. No complicated steps, just pure fun and excitement. Join no1jililogin
Feeling really lucky today! This site has a great atmosphere and the games are super addictive in a good way. Five stars. pkluckyi8game
После процедуры доктор контролирует самочувствие и объясняет, как продолжать лечение. В некоторых случаях достаточно одного выезда для первичной стабилизации, в других лечение продолжается несколько дней. Длительность терапии зависит от стажа употребления, количества алкоголя, сопутствующих заболеваний и реакции организма.
Дополнительная информация – вызов нарколога на дом в Луганске