நகை திருடி காதலனுக்கு KTM பைக் வாங்கித்தந்த காதலி…!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள . சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயதான மாணவி. பொள்ளாச்சியில் உள்ள கலைக் கல்லூரியில் பிகாம் சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, தனது தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். தோழியின் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அங்கு வைத்திருந்த 9 பவுன் தங்க நகையை திருடி உள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, பொள்ளாச்சி கிழக்கு ஸ்டேஷன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், தோழியின் வீட்டிலிருந்து மாணவி நகை திருடியதும், அவர் திருடிய நகையை, ஒரு கடையில் ரூ. 2,50,000 க்கு விற்பனை செய்து, தனது காதலனுக்கு ktm பைக் வாங்கி கொடுத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, மாணவி மீது திருட்டு வழக்கு பதித்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடித்தனர். இந்நிலையில் மாணவி திருடிய நகையை விற்ற தொகையில் பைக் வாங்க உடந்தையாக இருந்ததாக, மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். காதலி தனது காதலனுக்காக நகை திருடி பைக் வாங்கித் தந்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .இது தொடர்பான வீடியோ பதிவு வெளியாகி மாநில அளவில் அது வைரலாக மாறிவிட்டது.
