என் புருஷனை கொலை செஞ்சவங்கள பிடிங்க…மனைவி போலீசில் புகார்

கோவை காருண்யா சாடிவயல் பகுதியை சேர்ந்த தனலட்சுமி (30) என்பவர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், “என் கணவர் ராஜ துரை (35) நாங்கள் கூலி வேலை செய்து வந்தோம். எங்களுக்கு 7 பெண் குழந்தைகள் உள்ளனர் கடந்த மாதம் 6ம் தேதி இரவு என் கணவர் ஆலாந்துறை டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். அங்கே ராமர், லட்சுமணர் பணம் கேட்டு தாக்கி கள்ளி விட்டதில் என் கணவர் காயம் அடைந்து விட்டதாக கூறினார்கள். கோவை அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட என் கணவர் கடந்த 16ம் தேதி இறந்து விட்டார் என் கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளது. அவரை மேலும் சிலர் தாக்கியிருப்பதாக தெரிகிறது ஆலாந்துறை போலீசார் சரியாக விசாரிக்க வேண்டும், என் கணவரை சாகும் வரை தாக்கியவர் யார் என தெரியவேண்டும். ” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *