கோவை மாவட்டத்தில் ஓட்டு சாவடிகளுக்கு வீல் சேர் ரெடி. ..

கோவை மாவட்டத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில்

மேட்டுப்பாளையம்.கவுண்டம்பாளையம்,சூலூர் உள்பட மொத்தம் 10 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளது. இதில் 3,563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.

= மாவட்டத்தில் மொத்தம் 1,062 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் விருப்பம் இருந்தால் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்காளிக்கலாம் அல்லது வீட்டில் இருந்தப்படியே தபால் ஓட்டு போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிக்கு நேரில் வரும் முதியவர்கள், வயதானவர்கள் நடக்க முடியாதவர்கள், நோய் பாதிப்புள்ளவர்கள் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலிகள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதற்காக 1,500 வீல் சேர் பெறப்பட்டுள்ளது. இதுவரை 200 வீல் சேர் வந்துள்ளது. வாக்காளர்களுக்கு உதவுவதற்காக தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தயார் செய்யப்பட்டுள்ளனர். என்சிசி பிரிவில் 2 ஆயிரம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு தேர்லில் ஒட்டு சாவடிகளில் உதவியாளர் பணி வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *