அதிமுகவை வழி நடத்துவது மிதுன்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி…

கோவையில் தமிழக அமைச்சர் ஆதார் அர்ஜுனா இன்று நிருபர்களிடம் கூறியதாவது

கோவை, நீலகிரி திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் வரைக்கும் 50 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 50 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது 45 தொகுதிகளில் வெற்றிபெறுவார்கள். கொங்கு மண்டலத்தின் ஒட்டுமொத்த தலைமையாக அதிமுக இருக்கும்.

ஆனால், 2026ம் ஆண்டு தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 50 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 15 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சேலத்தில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இல்லை என்றால் அதிமுகவால் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியாது, பாமக இல்லையென்றால், எடப்பாடி தொகுதியிலேயே அதிமுக வெற்றி பெற்றிருக்க முடியாது. எடப்பாடி தொகுதியில், எங்களது வேட்பாளர் அருண்குமாரை எங்கேயோ கொண்டுபோய் அடைந்து வைத்துவிட்டனர்.

ஆனால் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அருண்குமார் அதிமுகவில் இணைந்துள்ளார். எங்களது வேட்பாளரை யார் விலை கொடுத்து வாங்கி, ஒளித்து வைத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இதற்கு பெயர் குதிரை பேரம் இல்லையா? ஜெயலலிதா விசுவாசிகள் வெளியே சென்றுவிட்டதால், இன்று அதிமுக-வில் இருப்பது இரண்டே பேர்தான். ஒன்று எடப்பாடி பழனிசாமி. மற்றொன்று அவரது மகன் மிதுன். மிதுனுக்கு இந்த கட்சியை அடமானம் வைத்து விட்டார். எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அதிமுக-வில் பெரும் சொத்து உருவாக்கி வைத்தனர். அதிமுக டிரஸ்டில் பல ஆயிரம் கோடிக்கணக்கான சொத்து, பணம் இருக்கிறது. இதனை அபகரிக்க தனது மகன் மிதுனை கொண்டுவந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி.

கொங்கு மண்டலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதி. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தொழிலதிபர்களை தொழில் செய்ய விடாமல் பணம் கேட்டு மிரட்டுவார்கள். எனவேதான் கொங்கு மண்டலத்தில் தனிப்பட்ட முறையில், கூட்டணி இல்லாமல், பண பலம் இல்லாமல் தவெக 25 தொகுதிகளை கைப்பற்றியது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பே வேலுமணி தங்கமணி ஒதுக்கப்பட்டு விட்டனர். அதிமுக என்கிற கட்சியை மறைமுகமாக வழிநடத்துவது மிதுன் அவர்தான் வேட்பாளரை தேர்வுசெய்தார். எடப்பாடி பழனிசாமி எங்கு பிரசாரம் செய்ய வேண்டும். எங்கு செல்ல வேண்டும் என்பதை மிதுன்தான் முடிவு செய்கிறார். அன்றைய காலக்கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வுசெய்ய சசிகலாவையே வெளியே அனுப்பினர் இதற்கு வேலுமணி, தங்கமணி, சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் கடினமாக வேலை செய்தனர். ஆனால், சீட்டில் உட்கார்ந்தவுடன் அவர்களையும் தூக்கி வீசிவிட்டார், எடப்பாடி பழனிசாமி.

செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார்கள். தென்மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக அதிமுக வலுவிழந்து விட்டது. தேமுதிக விஜயகாந்த் யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ அவர்களுடன் இணைந்து தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செயல்பட்டு வருகிறார் விஜயகாந்த் ஆன்மா இதை மன்னிக்காது.

இவ்வாறு அமைச்சர் ஆதன் அர்ஜூனா கூறினார்.

2 thoughts on “அதிமுகவை வழி நடத்துவது மிதுன்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *