கோவையில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது
கோவை அவிநாசி சாலையில் கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இன்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.
இதனை கவனித்த டிரைவர் காரை சாலையோரத்தில் நிறுத்தினார். காரின் முன்பகுதியில் தீ பிடித்து எரிந்தது. கார் தீ பிடித்து எரிவதை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கினர். அதற்குள் கார் முழுவதும் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இதுகுறித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் எரிந்து சேதமானது. காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். இது குறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். அவிநாசி சாலையில் நடுரோட்டில் தீ பற்றி எரிந்த காரால், பரபரப்பு ஏற்பட்டது.

I’ve been looking for a reliable slot site for a while and this one really delivers. The gameplay is smooth and the payouts feel fair. Definitely worth checking out liga2000slot
Finally found a working link for the APK. Installation was a breeze and the app runs perfectly on my Android phone. Great job on the optimization! jjwingamedownloadapk
The bonuses are top notch and the registration process was a breeze. I am really enjoying the vibe here. phtaya666 is my new favorite spot.
This is exactly what I was looking for. Simple, fun, and very rewarding. Definitely spending more time on eu88fun.