கோவையில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது
கோவை அவிநாசி சாலையில் கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இன்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை கவனித்த டிரைவர் காரை சாலையோரத்தில் நிறுத்தினார். காரின் முன்பகுதியில் தீ பிடித்து எரிந்தது. கார் தீ பிடித்து எரிவதை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கினர். அதற்குள் கார் முழுவதும் தீப்பிடித்து எரியத்தொடங்கியது….
