முதல்வர் விஜய் கோவை வருகை போக்குவரத்து மாற்றம்…

தமிழக முதல்வர் விஜய் நாளை மாலை தாராபுரத்தில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவர் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரம் செல்ல இருப்பதால், கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து, சின்னியம்பாளையம், ஏர்போர்ட் வழியாக மாநகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து எல் அண்ட் டி பைபாஸ் வழியாக சிந்தாமணி புதூர் ஒண்டிப்புதூர், பிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம். நீலாம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகு ரக வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து எல் அண்ட் டி பைபாஸ் வழியாக சிந்தாமணி புதூர், ஒண்டிப்புதார், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரவாம்.

கோவை மாநகரில் இருந்து அவினாசி சாலை வழியாக வெளியே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் லட்சுமி மில்ஸ் சந்திப்பில் யூ-டர்ன் செய்து புலியகுளம். ராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக எல் அண்ட் டி பைபாஸ் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அவினாசி சாலை, வி.கே.ரோடு வழியாக வரும் இலகுரக வாகனங்கள், மசக்காளிபாளையம் சாலை, சிங்காநல்லலூர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

அவிநாசி சாலை, ஹோப்ஸ் வழியாக வரக்கூடிய வாகனங்கள், டைடல் பார்க் சந்திப்பில் யூ-டர்ன் செய்து காமராஜர் சாலை, சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். காளப்பட்டி சந்திப்பில் இருந்து சித்ரா அவினாசி சாலை வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் காளப்பட்டி சந்திப்பில் இருந்து தென்னம்பாளையம் வழியாக அவினாசி சாலைக்கு செல்லலாம்.

கோல்ட் வின்ஸ் சாலையில் இருந்து அவினாசி சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஹவுசிங் யூனிட் ரோடு, மாருதி பேக்கிரி ஜங்க்ஷனில் இருந்து வலது புறம் திரும்பி வீரியம்பாளையம் சாலை வழியாக காளப்பட்டி சந்திப்பிற்கு செல்லலாம்.

இன்று முதல்வர் வருகையையொட்டி விமான நிலையத்திற்கு பயணிகளை இறக்கி விடவும் ஏற்றி செல்லவும் வரும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள், தங்களது பயண நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வந்து சேருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் கால் டாக்ஸிகள் மற்றும் மற்ற வாகனங்கள் விமான நிலையத்திற்குள் நிறுத்த அனுமதியில்லை.

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

One thought on “முதல்வர் விஜய் கோவை வருகை போக்குவரத்து மாற்றம்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *