சோப்பு ஷாம்பு கழிவா… நொய்யல் ஆற்றில் பறக்கும் நுரை…

கோவையில் நொய்யல் ஆற்றின் பிரதான வாய்க்கால்களாக கருதப்படும் சேத்துமா வாய்க்கால், வெள்ளலூர் ராஜ வாய்க்கால் புட்டு விக்கி வாய்க்கால், குறிச்சி வாய்க்காலில் சாக்கடை கழிவு நீருடன் தொழில் நிறுவன கழிவுகள் கலப்பதாக தெரியவந்துள்ளது.

செல்வபுரம், பொன்னையராஜபுரம், தெலுங்குபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டிற்கு முன்பே. சாயப்பட்டறைகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்த பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டம் (ஆர்.ஓ) இல்லாததால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாயப்பட்டறைகளை மூடி விட்டது. ஆனால், சில நிறுவனங்கள் ரகசியமாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்த ஆய்வும் இதுவரை நடத்தவில்லை. செவ்வாம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி குளத்தில் இருந்து முத்தண்ண குளம், செல்வசிந்தாமணி நோக்கி பாயும் வாய்க்காலில் நுரை பொங்க கழிவு நீர் பாய்கிறது.

கழிவுநுரையால் ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலையிருப்பதாக தெரிகிறது.

சுண்ணாம்பு கால்வாய் பட்டுவிக்கி தடுப்பணை பகுதியில் அதிக நுரை பாதிப்பு இருக்கிறது. நொய்யல் வாய்க்கால், தடுப்பணையில் பாய்வது கழிவா? சோப்பு ஷாம்பு நுரையா? என உறுதி செய்ய முடியாத நிலையிருக்கிறது.

இது தொடர்பாக மாசு கட்டுபாட்டு துறையினர் சாம்பிள் எடுத்து ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் பல முறை ஆய்வு நடந்துள்ளது. ஆனால் கழிவு நீர் தடுக்கப்படவில்லை. வெளிப்படையாக சாக்கடை கழிவு நீர் ஆற்றில் விடப்படுகிறது. பல வகை கழிவுகள் இதில் கலப்பதால், இது எந்த மாதிரியான கழிவு என உறுதி செய்ய முடியவில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *