ஜிடி நாயுடு மே பாலத்தில் 5 கார்கள் அடுத்தடுத்து மோதல்…
கோவை அவினாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று மதியம் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கார் பிரேக் பிடித்த போது பின்னால் வந்த கார்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடுத்தடுத்து மோதியது.
இதில் 5 கார்கள் சேதமடைந்தது. கார்களை ஒட்டி வந்தவர்கள் அப்படியே வாகனங்களை நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரித்தனர். வாகனங்களை அகற்றிய பின்னர், அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
இதேபோல் சிங்காநல்லூர் குளக்கரை அருகே தனியார் டவுன்பஸ் ஒன்று அந்த வழியாக சென்ற மொபட் மீது மோதியது. இதில் மொபட் ஒட்டிய நபர் காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மொபட் மீது பஸ் ஏறி நிற்கும் காட்சியை அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர்.
இது சமூக வலை தளங்களில் பரவியது. வாகனங்களை கட்டுப்பாடின்றி அதிக வேகத்தில் ஓட்டுவதாக கூறி அந்த பகுதி மக்கள், பஸ் டிவைர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இங்கே போக்குவரத்து போலீசார் சென்று விபத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

I’ve been playing here for a few weeks now and the payout speed is impressive. Definitely my new favorite spot for some action. Check out brsuoerbet
The registration was a breeze and I was playing within minutes. The bonus options are actually decent compared to other sites. Cheers to akunbosslot for the great service.
Super reliable platform. I’ve tried many others but this one feels the most secure and honest. The rewards are awesome too. vnvic88