கோவை மாவட்டத்தில் 19 வாக்குச்சாவடிகள் குறைப்பு

.தேர்தல் கமிஷன் உத்தரவின் படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியினை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான முன்மொழிவுகள் அனைத்து சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் வரப்பெற்ற நிலையில், வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்து இறுதி செய்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது. வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பாக வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் கடந்த 19.10.2026ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (தேர்தல்), தனி வட்டாட்சியர் (தேர்தல்) மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு முன்மொழிவினை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பளித்த பின்னர். கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 3563 வாக்குச்சாவடிகளில், 19 வாக்குச்சாவடிகள் குறைந்து 3544 வாக்குச்சாவடிகளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *