கோவையில் நடுரோட்டில் சண்டை போட்ட பஸ் டிரைவர் கண்டக்டர் 6 பேர் கைது…

பீளமேடு பகுதியில் நேர பிரச்னையில் தனியார் பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் நடுரோட்டில் மோகி கொண்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்

கோவை, பீளமேடு பகுதியில், எஸ்-2 நம்பர் தனியார் பேருந்து மற்றும் எஸ்-7 தனியார் பேருந்து ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வந்துள்ளது. அப்போது, இரு பேருந்துகளின் ஊழியர்களுக்கும் இடையே, நேர பிரச்னை மற்றும் பயணிகளை ஏற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு பேருந்துகளின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், ஊழியர்கள் சாலையின் நடுவே பேருந்துகளை நிறுத்தி, தகராறில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அந்த செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை தொடர்ந்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் ரத்தினபுரியை சேர்ந்த சந்தோஷ் (27), ராம் நகரை சேர்ந்த ஹரி கண்ணன் (27), பொள்ளாச்சியை சேர்ந்த சக்தி சந்தோஷ் (26), சூலூரை சேர்ந்த சஞ்சய்குமார் (22), தொண்டாமுத்தூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி (36), திருப்பூரை சேர்ந்த செந்தில்குமார் (28) ஆகிய 6 பேரை கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *