K. V

கோவை மேற்குப் பைபாஸ் ரோட்டில் ரூ 2.40 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க திட்டம்..

கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் கோவை மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. அடுத்த வாரம் திறப்பு விழா நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் அறிவொளி நகர் பகுதியில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் நேற்று சரக்கு ஆட்டோ மற்றும் பயணிகள் ஆட்டோ மோதியது . இதில் 22 வயதான கல்லூரி மாணவி உடல் நசுங்கி இறந்து விட்டார். மேலும் நான்கு பேர்…

Read More

கோவை அரசு பள்ளியில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்களால் பரபரப்பு..

கோவை சர்க்கார் சாம குளம் அருகே உள்ள வெள்ளமடை ஊராட்சியில் தொட்டிபாளையம் அரசு பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தினமும் கழிவறை சுத்தம் செய்ய வைப்பதாக புகார் இருந்தது. மாணவர்கள் இந்த விஷயத்தை தங்களது பெற்றோர்களிடம் கூறி பள்ளிக்கு செல்ல மாட்டோம் என புலம்பி உள்ளனர். இந்த நிலையில் இன்று பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது ஆசிரியை முன்பு மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த விஷயத்தை பயம் கலந்த தயக்கத்துடன் கூறினர்…

Read More

கோவை மேற்கு பைபாஸ் ரோட்டில் விபத்து; மாணவி சாவு பொதுமக்கள் மறியல்..!

கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை புதிதாக பைபாஸ் ரோடு போடப்பட்டது . மேற்கு பைபாஸ் என அழைக்கப்படும் இந்த ரோட்டில் இன்னும் முறையான போக்குவரத்து துவக்கப்படவில்லை. இருப்பினும் மதுக்கரையிலிருந்து கோவைப்புதூர் சுண்டக்காமுத்தூர் பேரூர் பச்சாபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. இன்று ஆட்டோ ஒன்று ஐந்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த அனைவரும் காயமடைந்தனர் . ஆபத்தான நிலையில் மூன்று பேர்…

Read More

கோவை வனத்தில் 50 எக்டரில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்..!

காந்திநகர் பத்ரகாளி அம்மன் கோயில் வனப் பகுதியில் அகற்றப்படும் மரங்கள்..! கோவை மதுக்கரை வன சரக எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் , ஷூட்டிங் ரேஞ்ச், சந்தோஷி மாதா கோயில் வீதி, மிலிட்டரி கேம்ப், மைல்கல் உள்ளிட்ட பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவு அடர்ந்து வளர்ந்துள்ளது. இவற்றில் 50 எக்டரில் களை தாவரங்களான உண்ணி செடிகள் லேண்டனா வகை தாவரங்கள் சீமை கருவேல மரங்கள் அகற்றுப்பணி வனத்துறை மூலமாக இன்று துவங்கியது . இரண்டு ஜேசிபி மூலமாக…

Read More

திமுக ஆட்சி இருக்க கூடாது கோவையில் நயினார் நாகேந்திரன் பேட்டி..

கோவை வடவள்ளி பகுதியில் மோடி முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என தெரியவில்லை. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளாக முதலமைச்சர் ஸ்டாலின் செய்யவில்லை. திமுக அரசு 470 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.சொத்து வரி, மின்சார கட்டணம்…

Read More

கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை 2100 டன்னாக அதிகரிப்பு..!

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் உள்ளது. 11.59 லட்சம் ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் 11.22 லட்சம் அரிசி கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. மாவட்ட அளவில், ரேஷன் அரிசி மட்டுமின்றி துவரம்பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் வழங்கப்படுகிறது. இதர அரசு துறைகளின் பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டேன்டீ நிறுவனத்தின் டீத்தூள், உப்பு மற்றும் சில உணவு பொருட்கள் விற்பனைக்கு இருக்கிறது. ரேஷன் அரிசியுடன், கோதுமை வினியோகம் அதிகரிக்க வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை…

Read More

கோவை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணி; தேர்தல் பார்வையாளர் ஆய்வு..!

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றது . இந்த நிலையில் இன்று தேர்தல் பார்வையாளர் மகபீர் பிரசாத், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் . இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், ஆர்டிஓ .,கள் ராமகிருஷ்ணன் , மாருதி பிரியா தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி தாசில்தார் தணிகை வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் புதிதாக…

Read More

கோவை கேரளா இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தம் பயணிகள் பரிதவிப்பு..!

ஆள் நடமாட்டம் , பஸ்கள் இன்றி காணப்பட்ட உக்கடம் பஸ் ஸ்டாண்ட்.. கோவை மாவட்டத்தில் மத்திய அரசு கண்டித்து பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தியது. அரசுத்துறை தனியார் மயமாக்க கூடாது என்பன போன்ற கோரிக்கைகள் விடப்பட்டன. கேரள மாநிலத்திலும் தொழிற்சங்கங்களில் கடுமையான போராட்டம் மற்றும் ஸ்ட்ரைக் காரணமாக அங்கே பயணிகள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒன்றிய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு…

Read More

கோவையில் தொழிற் சங்கத்தினர் மறியல் போராட்டத்தினால் பரபரப்பு…!

மத்திய அரசு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும். மின்சார சட்டத்தை திருத்தக் கூடாது. அரசுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் பெயரை கட்டாயம் மாற்றக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்க மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டு நடவடிக்கை குழு சார்பில்…

Read More

கோவையில் சத்துணவு ஊழியர்களை சந்தித்து பேசிய நைனார் நாகேந்திரன்

சத்துணவு ஊழியர்களிடம் ஆறுதல் கூறி பேசிய நயினார் நாகேந்திரன்.. காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இளநிலை உதவியாளர் நிலையில் பணி செய்பவர்களுக்கு 15,500 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடிய விடிய அங்கேயே தங்கி சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று 10 நாள் போராட்டத்தில்…

Read More