K. V

கோவையில் தன்னைத்தானே உளியால் செதுக்கும் சிலைதிறப்பு..!

கோவை செஞ்சிலுவை சங்கம் ரவுண்டானா பகுதியில் கோவை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் தன்னை தானே உளியால் செதுக்கி கொள்ளும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முயற்சி முன்னேற்றம் கடும் உழைப்பு போன்றவற்றை குறிக்கும் வகையில் இந்த சிலை உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட இந்த அழகிய சிலையை இன்று கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் திறந்து வைத்தார் .இவ்விழாவில் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவை நகரில்…

Read More

ரூ.250 கோடியில் அமைக்கப்பட்ட கோவை மேற்கு பைபாஸ் ரோடு அடுத்த வாரம் திறப்பு..!

கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. மூன்று பேக்கேஜ் முறையில் பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழி பாதையாக ரோடு போடும் பணி நடத்தப்பட்டது. 250 கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்பட்டு வந்த பணி தற்போது நிறைவு பெற்று ரோடு மார்க்கிங் மற்றும்…

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் முழு அளவில் தயார்..!

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆய்வு நடத்தினார். நாளை, மாநில அளவில் இந்திய தேர்தல் கமிஷனர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகே தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படும் நாட்கள், அதற்கான பணிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளுக்காக தலைமை தேர்தல் அதிகாரி, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி பவன் குமார் ,தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர்…

Read More

கோவை மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு விரைவில் புதிய வாக்காளர் அடையாள அட்டை..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை தபால்கள்.. கோவை மாவட்டத்தில் 25.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இதுவரை சுமார் மூன்று லட்சம் பேர் புதிய வாக்காளர்களாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகள் நடந்தது . இதில் 6.50 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் வரும் 19ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையே புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள்…

Read More

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ வைப்பதை கண்காணிப்பு கேமரா..

கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. நகரில் மாநகராட்சியின் 100 வார்டில் இருந்து தினமும் சுமார் ஆயிரம் டன் குப்பைகள் இங்கே குவிக்கப்பட்டு வருகிறது. குப்பைத்தொட்டியில் சிலர் ஓட்டல் கடைகளின் சாம்பல் கழிவுகளை கொட்டுவதாக தெரிகிறது. இந்த சாம்பலில் உள்ள எரியும் கரி துண்டுகளும் குப்பைகளுடன் வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வந்து குவிக்கிறார்கள். முறையாக தரம் பிரிக்காமல் லோடு கணக்கில் குவியும் குப்பைகளில் எளிதாக தீப்பிடித்து விடுகிறது. புதிதாக கொட்டப்படும் குப்பைகளில் மீத்தேன் வாயு…

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு துணை ராணுவ படை விரைவில் வருகை..!

கோவை மாவட்டத்தில் சூலூர், சிங்காநல்லூர், கோவை தெற்கு, வடக்கு, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, கவுண்டம்பாளையம் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3524 ஒட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சென்சிடிவ் ஓட்டு சாவடிகள் 450 முதல் 500 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோவை மாவட்டத்திற்கு வெளி மாநிலத்தினர் அதிகளவு வந்து செல்கிறார்கள். கடந்த கால தேர்தல்களின் போது கோவை மாவட்டத்தில் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்தது. மேலும் கோவை பதட்டமான…

Read More

கோவையில் ஊருக்குள் புகுந்த 3 யானைகள் ; ஹாரன் அடித்து விரட்டியதால் பரபரப்பு..!

கோவை குப்பனூர் தீத்திபாளையம் பகுதியில் நேற்று மூன்று யானைகள் காட்டிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தன . யானைகள் வாழைத்தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதியில் இருந்த நீர் தொட்டிகளில் தண்ணீர் குடித்து ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் யானைகளை வாகனங்களில் சென்று ஹாரன் சத்தம் மூலமாக விரட்டினர் ‌ . மூன்று பெண் யானைகள் வாகனங்களின் சத்தம் கேட்டு வேகமாக ரோடு வழியாக ஓட்டம் பிடித்தன. தொடர்ந்து ஹாரன் சத்தம் கேட்டுக் கொண்டே…

Read More

கோவையில் வருவாய் துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டம்..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம், நில அளவையாளர் ஒன்றிணைப்பு குழு, வருவாய் கிராம உதவியாளர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களை சார்ந்தவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது தொடர்பாக…

Read More

கோவையில் கனிமம் கடத்தல் கண்காணிக்க அமைக்கப்பட்ட ஏஐ கேமராக்கள் முடக்கம்..!

கோவை மாவட்டத்தில் கனிமப் பொருட்கள் கடத்தல் மற்றும் கல்குவாரிகளில் முறைகேடுகளை கண்டறிய கனிம வாகனங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் முக்கிய செக்போஸ்ட்களில், மாவட்ட எல்லை சந்திப்பு ரோடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. இந்த கேமராக்களை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்க வசதி செய்யப்பட்டது.கடந்த 3ம்தேதி இந்த கண்காணிப்பு கேமரா மற்றும் கட்டுப்பாட்டு அறையை கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் திறந்து வைத்தார். இதில் 108 ஏஐ கண்காணிப்பு…

Read More

கோவையில் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம்; வணிகவரி அலுவலர் கணவருடன் கைது..!

கோவை வணிக வரித்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி(48). இவரது கணவர் தனசேகர்(52). உதவி ஆணையர் மகேஸ்வரியிடம் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் அபினேஷ் என்பவர் நிறுவனத்தின் சார்பில் அதிகமாக செலுத்திய வணிகவரியை (இன்புட் வரி) திரும்ப பெற விண்ணப்பித்து இருந்தார். இதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என உதவி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என அபினேஷ் தெரிவித்த நிலையில், இறுதியாக 60 ஆயிரம்…

Read More