K. V

தேர்தல் பணிகளை ஏற்க மறுக்கும் அரசு அலுவலர்கள், சிபாரி செய்யும் உயர் அதிகாரிகள்…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட அளவில் 3571 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. ஒரு ஓட்டு சாவடிக்கு 5 பேர் பணியாற்ற வேண்டும். மாவட்ட அளவில் ஓட்டு சாவடிகளில் மட்டும் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இது தவிர தேர்தல் பணியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். தேர்தல் பணி அலுவலர்களுக்கு பணி உத்தரவு விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் அலுவலர் சிலர்…

Read More

கோவையில் வாக்காளர்களுக்காக பதுக்கிய 173 அண்டா பறிமுதல்…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை கண்டறிய சோதனை நடத்தி வருகிறார்கள் இன்று உக்கடம் புல்லு காடு பகுதியில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பாத்திரங்களை பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் வீட்டில் 173 சில்வர் அண்டா இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாத்திரங்களை தேர்தல் பிரிவினர் பறிமுதல் செய்தனர். இந்த…

Read More

கோவையில் தேர்தல் சோதனை: ரூ 2.76 கோடி நகை பணம் பொருட்கள் பறிமுதல்…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இன்று வரை 2.76 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் நகை மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 528 லிட்டர் அளவிலான மது, 129 கிலோ எடையிலான போதை பொருட்கள் 32 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து குறிப்பிட்ட சில பகுதிகளில் பணம் மற்றும் பொருட்கள் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. ஆர்…

Read More

தமிழக குடிநீர் வாரியத்தில் பல கோடி ரூபாய் திட்டப்பணி ஒதுக்கீட்டில் முறைகேடு புகார்…!

தமிழக மேற்கு மண்டல மாவட்டங்களில் குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த மாவட்டங்களுக்கான குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டாக போலியான நிதி மூலதனம் ( பைனான்சியல் டர்ன் ஓவர்), பணி அனுபவ கால சான்றுகளை சமர்ப்பித்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளை செய்து வருவதாக…

Read More

கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 110 புகார்கள் குவிந்தது…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டு 10 சட்டமன்ற தொகுதிகளை கண்காணிக்கும் பணி கடந்த 16ம் தேதியில் இருந்து நடக்கிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படைகளை கண்டறிய ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பிரிவும் துவக்கப்பட்டது. தினமும், ஒவ்வொரு வாகனமும் எந்த ஏரியா வழியாக சென்று வருகிறது என இதில் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் 1950, 1800 425 0086 என்ற இலவச தொடர்பு எண். 0422 2300156, 0422 2300157 என்ற தொலைபேசி…

Read More

கோவை ஜிசிடி ஓட்டு எண்ணிக்கை மையம் தயாராகிறது…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3571 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. இந்த நிலையில், மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஒட்டு எண்ணிக்கை மையம் (கவுண்டிங் சென்டர்) தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது . இதன்படி, கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஒட்டு எண்ணிக்கை…

Read More

பணம் பரிசு பொருள் தரக்கூடாது. கோவையில் நடத்தை விதிகள் ஆலோசனை கூட்டத்தில் உத்தரவு…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் ,நோடல் ஆபீசர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் சார்பில் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், தேமுதிக, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு…

Read More

கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நோடல் ஆபீசர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது . இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள் கணக்கு பார்வையாளர்கள் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் மாவட்ட எஸ் பி கார்த்திகேயன் துணை கமிஷனர் தேவநாதன் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பார்வையாளர்கள் தரப்பில் கூறியதாவது: இந்த கூட்டத்தில்…

Read More

கோவையில் பறக்கும் படை சோதனை: கட்டுக்கட்டாக பணத்துடன் சென்ற வியாபாரிகள்…!

கோவை மாவட்டத்தில் தேர்தலில் சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு பரிசாக பொருட்கள், பணம், நகை மற்றும் இதர பொருட்கள் வழங்குவதை தடுக்க சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரம் சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படை நிலையான கண்காணிப்பு படை என 180 குழுவினர் மாவட்ட அளவில் சோதனை செய்கிறார்கள். வாகனங்களின் இயக்கம் ஜிபிஎஸ் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தல் பணிகளில் கட்சி, வேட்பாளர்கள் ஈடுபடவில்லை. பொதுமக்கள், வியாபாரிகள், மருத்துவ தேவை, தொழில் அபிவிருத்தி…

Read More

கோவை மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் விரைவில் தயார்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் 12 கட்சிகள் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்றுள்ளது. சில கட்சிகள் அங்கீகாரமில்லாத நிலையில் இருக்கிறது. அங்கீகாரம் இல்லாக பதிவு செய்த கட்சிகளுக்கு பொதுவான சின்னங்கள் வேட்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வழங்கப்படுகிறது. சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்த சின்னம் தான் பெற வேண்டியிருக்கிறது. சிலர் முன்னுரிமை அடிப்படையில் பட்டியலில் உள்ள சின்னங்களை பெற முடியும். கடந்த…

Read More