கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவு ரூ. 6 கோடி…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

இதற்காக மாவட்ட அளவில் சுமார் 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 3540 ஓட்டு சாவடிகள் அமைப்பு, ஓட்டு சாவடி ஆவணங்கள், தேர்தல் பொருட்கள், வாகனங்கள், தள வாடங்கள், கேமராக்கள், உள் கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டது. தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

அந்த கல்லூரி வளாகத்தில் 300 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இரும்பு தடுப்புகள், கவுண்டிங் சென்டர் வளாகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஸ்ட்ராங் ரூம் வடிவமைப்பு மற்றும் பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டது.

இதற்காக தேர்தல் கமிஷன் சார்பில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடத்தப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை பணியில் சுமார் 500 அலுவலர்கள் போலீசார் மற்றும் இதர துறையினர் என 3 ஆயிரம் பேருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு பல லட்ச ரூபாய் செலவானது. தேர்தல் பணிகளுக்கு வாடகை அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த தேர்தலில், பயன்படுத்திய தேர்தல் ஆவணங்களை அழிப்பதற்காக நவீன முறையிலான பேப்பர் தூள் செய்யும் மெசின் பெறப்பட்டது. இந்த மெசினில் ரகசிய ஆவணங்கள் அழிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *