கோவையில் குப்பை விவகாரத்தில் மூதாட்டியை வெட்டி கொலை செய்தவர் கைது…!
கோவை ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர் வயல் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்லி ( 72) .
இவருக்கும் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தனியார் நிறுவன
ஊழியரான நோபில் வாட்சன் ( 47) என்பவருக்கும் குப்பை கொட்டுவது தொடர்பான பிரச்சனை இருந்து வந்தது.
ஜெஸ்லி அடிக்கடி நோபில் வாட்சன் வீட்டு முன்பு குப்பையை கொட்டி வந்துள்ளதாக தெரிகிறது. இதை நோபில் வாட்சன் கண்டித்து வந்தார். இன்று காலை ஜெஸ்லி குப்பை கொட்ட வந்தபோது அவருடன் நோபில் வாட்சன் வாக்குவாதம் செய்து தாக்கியுள்ளார். கடும் கோபத்தில் இருந்த அவர் தனது வீட்டில் இருந்த அரிவாளால் ஜெஸ்லியை வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . இது தொடர்பாக காருண்யா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நோபில் வாட்சனை கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறுகையில் ஜெட்லி தனது வீட்டின் முன்பு குப்பை கொட்டுவது மட்டுமின்றி தனது தாயை அவதூறாக பேசி வந்தார்.
பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து அவர் இது போல் நடந்து கொண்டதால் எனக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது எனவே அவரை பழி வாங்க வெட்டி விட்டேன் என தெரிவித்தார்.
