பாரதியார் பல்கலையில் பிஎச்டி விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு…
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி முழு நேரம், பகுதி நேர படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வரும் 9ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலுள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பகுதி நேரம் மற்றும் முழுநேர பிஎச்.டி ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த படிப்புகளில் சேர பல்கலை.யின் www.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1,000, எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் நகல்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் பதிவாளர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை 641046 என்ற முகவரிக்கு வரும் 9-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், பி.எச்.டி., சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு இந்த மாதம் நடக்கிறது. இந்த தேர்வு அட்டவணை மற்றும் பிற விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
