வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி…

கோவை சித்தாபுதூர், என்.வி.என் லே அவுட்டைச் சேர்ந்த மனோஜ் கிங்ஸ்டன் (40). இவரது உறவினர் ஒருவர் மூலம் அரவிந்த்குமார் என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர் தங்கா ராபின்சன் என்பவரை மனோஜ் கிங்ஸ்டனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

மேலும், அரவிந்த்குமார் தனது நண்பர் தங்கா ராபின்சன் இங்கிலாந்தில் தொழிலதிபராக இருப்பதாகவும்.

தாங்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்தில் உள்ள எலைட் ஓவர்சீஸ் எஜுகேஷன் என்ற நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டில் வேலை மற்றும் விசா வாங்கி தருவதாகக் கூறியுள்ளனர். இதை நம்பிய மனோஜ் கிங்ஸ்டன் தனக்கும் இங்கிலாந்தில் வேலை வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர்கன் வேலை, விசா மற்றும் சில ஆவணங்கள் தயார் செய்ய வேண்டும் என்றும், ரூ.20 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.

உடனே மனோஜ் கிங்ஸ்டன் அந்த பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர்கள் கூறியபடி மனோஜ் கிங்ஸ்டன் ரூ.10 லட்சத்தை கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி அரவிந்த்குமார் மற்றும் அவரது மனைவி யுகன்யா வின்சென்ட் வங்கி கணக்கிற்கும், ரூ. 10 லட்சத்தை, 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி தங்கா ராபின்சன் வங்கி கணக்கிற்கும் அனுப்பி வைத்தார். அதன்பின் வெகு நாட்களாகியும் அவர்கள் கூறியபடி எந்த வேலையையும் ஏற்பாடு செய்து தரவில்லை. இதனால், மனோஜ் கிங்ஸ்டன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், அதையும் அவர்கள் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தனர்.

இதனால், மனோஜ் கிங்ஸ்டன் நேற்று இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அரவிந்த்குமார், அவரது மனைவி யுகன்யா வின்சென்ட் மற்றும் தங்கா ராபின்சன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

One thought on “வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *