எஸ் ஐ ஆர் வேலை செய்ய மாட்டோம்..

பேரூர் பகுதியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் எஸ் ஐ ஆர் என்கிற வாக்காளர் சுருக்கத் திருத்த பணிகளை செய்ய மாட்டோம் எனக்கூறி அரசு ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Read More

ஐடி பார்க் ஏரியாவில் யானைகள் ஜாலி வாக்..!

கோவை ஜீரணத்தம் ஐடி பார்க் அருகே உள்ள முட்புதர் காட்டில் மூன்று யானைகள் இன்று புகுந்தன. இந்த யானைகள் அந்தப் பகுதியில் உள்ள சாக்கடை குட்டையில் குளித்து நீராடி முள்காட்டுக்குள் ஜாலியாக வலம் வந்தன . பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த இந்த யானைகள் திரும்பவும் வனப்பகுதி செல்ல முடியாமல் ஊருக்குள் சுற்றுவதாக தெரியவந்துள்ளது. இந்த யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்ட முயன்ற போது திடீரென காணாமல் போய்விட்டன. யானைகளை தேடி வனத்துறையினர்…

Read More

ஓட்டு சின்னம் எல்லாம் அழிக்கிறாங்க

கோவை மாவட்டத்தில் 19523 ஓட்டு மிஷின்கள் கட்டுப்பாட்டு கருவிகள் தெற்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.‌ இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஓட்டு மிஷின்களில் பதிவாகியுள்ள ஓட்டுக்கள் சின்னங்கள் இதர தகவல் அனைத்தும் அழிக்கும் பணி இன்று துவங்கியுள்ளது. ரீ செட்டிங் என்ற பெயரில் மொத்த தகவல்களும் நீக்கம் செய்யப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தும் வகையில் இந்த ஓட்டு மிஷின்கள் தற்போது மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. 40 நாளில்…

Read More

செம்மொழி பூங்கா திறந்தாச்சு…

காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறக்கப்பட்டது. 208 கோடி ரூபாய் செலவில் 45 ஏக்கர் பரப்பளவில் நீர் வனம் மூலிகை வனம் என 20 வனப் பூங்கா மற்றும் பல்வேறு வசதிகளுடன் இந்த செம்மொழிப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 15 ரூபாய் சிறியவர்களுக்கு ஐந்து ரூபாய் கட்டணம். காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பூங்காவை பார்வையிட்டு ரசிக்கலாம்.

Read More

சிறுதுளி சார்பில் மரக்கன்று நடவு

கோவை சிறுதுளி அமைப்பு கோவை புதூர் 4 பட்டாலியன் சார்பில் மரக்கன்று நடவு பணி நடந்தது. இதில் கிருஷ்ணா கல்லூரி ,ஆதித்யா கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர். சுமார் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் சிறு துளி அமைப்பின் அறங்காவலர் வனிதா மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

கோவை பேரூராட்சிகளில் கழிவுகள் அகற்ற 14 வாகனங்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் கழிவு அகற்றும் பணிக்காக 14 வாகனங்கள் பெறப்பட உள்ளது. 63 லட்சம் செலவில் இந்த வாகனங்கள் வாங்கப்பட உள்ளது. கோவை மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக இதற்கான டெண்டர் அறிவிப்பு விடப்பட்டிருக்கிறது . வரும் 15ம் தேதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு வாகனங்கள் பெறப்படும். பேரூராட்சி பகுதியில் உள்ள குப்பை மற்றும் பல்வேறு திடக்கழிவுகளை அகற்றவும் உரம் தயாரிக்கும் கூடங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

Read More

கோவை போலீசில் 1400 புதிய கேமரா..!

கோவை மாநகர போலீசில் 20 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகிறது. இது தவிர சிறப்பு யூனிட்டுகளும் உள்ளது. மாநகர் பகுதியில் பல்லாயிரம் கேமராக்களை போலீசார் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனை , கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம் காந்திபுரம் , உக்கடம் , சிங்காநல்லூர் மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு பஸ் ஸ்டாண்ட் மற்றும் மார்க்கெட், முக்கிய இடங்களை போலீசார் கண்காணிப்பு கேமரா அமைத்து பார்த்து வருகிறார்கள் இந்த நிலையில் மாநகரப்…

Read More

செம்மொழி பூங்கா நாளை திறப்பு

கோவை காந்திபுரம் சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. இது இரு வாரம் முன்பே திறக்கப்பட்டது. இந்தப் பூங்கா நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. பொதுமக்கள் பூங்காவில் நுழைந்து இயற்கை காட்சிகளை பார்வையிடலாம். பெரியவர்களுக்கு 15 ரூபாய் கட்டணம் சிறியவர்களுக்கு ஐந்து ரூபாய் கட்டணம்.

Read More

கோவை கலெக்டர் ஆபீசுக்கு 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது .இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்ப நாயுடன் வந்து சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் வந்த வகையில் இருக்கிறது . தற்போது 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் ரமேஷ் என்ற பெயரில் டார்க் நெட் பயன்படுத்தி இமெயில் அனுப்பி…

Read More

என் புருஷனை கொலை செஞ்சவங்கள பிடிங்க…மனைவி போலீசில் புகார்

கோவை காருண்யா சாடிவயல் பகுதியை சேர்ந்த தனலட்சுமி (30) என்பவர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், “என் கணவர் ராஜ துரை (35) நாங்கள் கூலி வேலை செய்து வந்தோம். எங்களுக்கு 7 பெண் குழந்தைகள் உள்ளனர் கடந்த மாதம் 6ம் தேதி இரவு என் கணவர் ஆலாந்துறை டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். அங்கே ராமர், லட்சுமணர் பணம் கேட்டு தாக்கி கள்ளி விட்டதில் என் கணவர் காயம்…

Read More