கோவையில் பிணங்களை எரிப்பதில் சிக்கல்..

லேகாவை மாவட்டததில் வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி மயானங்களில் சடலங்களை தகனம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விறகுகள் மூலம் சடலங்களை எரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாநகராட்சி பகுதியில் 11 மின் மயானங்களில் இறந்தவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுகிறது. மின்சாரம் மற்றும் எல்பிஜி கேஸ் மூலம் இயங்கும் இயற்கை எரிவாயு தகன மேடைகள் இருக்கின்றன. இதன்மூலமாக, இறந்தவர்களின் சடலங்கள் வழக்கமாக எரியூட்டப்பட்டு வருகின்றன. , தற்போது வர்த்தக சிலிண்டர் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்…

Read More

கோவையில் வாலிபரை மிரட்டி ஜி பே மூலமாக 43 ஆயிரம் பறிப்பு: 4 மாணவர் கைது

விருதுநகரை சேர்ந்தவர் முனிஸ்குமார் (26), இவர், கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். ஐடி நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அந்த பணியில் இருந்து முனிஸ்குமார் விலகி வேறு வேலை தேடி வருகிறார். முனிஸ்குமார் சவுரிபாளையம் மற்றும் உடையம்பாளையம் பகுதியில் வேலை தேடி சென்றார். அப்போது உடையம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த தனக்கு தெரிந்த நபர் லோகேஷ் என்பவரது அறைக்கு சென்றார். அங்கு லோகேசின் நண்பர்கள் 3 பேர் இருந்தனர்….

Read More

போத்தனூர் தான் பாத் வந்தே பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி துவக்கினார்..!

கோவை மாவட்டத்தில் போத்தனூர்- தன்பாத் அம்ருத் பாரத் ரயில் சேவை இன்று மாலை துவங்கியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் நடந்த விழாவில் இருந்து காணொலி காட்சி மூலமாக இந்த ரயில் சேவையை துவக்கினார். போத்தனூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு மாலை 5.30 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டது. போத்தனூர் தன்பாத் அம்ருத் பாரத் ரயில் (வண்டி எண்: 06619) வரும் 13ம் தேதி மதியம் 12.30 மணிக்கு தன்பாத் ரயில் நிலையத்தை சென்றடையும்….

Read More

காவி மயம் ஆகிறது போத்தனூர் ரயில் நிலையம்..!

கோவை மாவட்டத்தின் பாரம்பரிய மற்றும் பழமையான ரயில் நிலையமாக போத்தனூர் ரயில் நிலையம் உள்ளது. கோவை ரயில் நிலையம் துவங்கும் முன்பு போத்தனூர் ரயில் நிலையம் துவக்கப்பட்டுள்ளது. தற்போது போத்தனூரில் ரயில் நிலையத்தை 100 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தில் பிட் லைன் மற்றும் ரயில் பாதை விரிவாக்கம் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் மஞ்சள் கலந்த வெளிர் பச்சை நிற வண்ணம் பூசப்பட்டிருந்தது. இந்த…

Read More

கோவை அப்பார்ட்மெண்ட் மூதாட்டி கொலையில் 2 பேர் கைது

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல அப்பார்ட்மெண்டில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது . இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த வீட்டில் ஆயுர்வேத டாக்டர் ராம்குமார் குட்டி என்பவரின் தாய் கஸ்தூரி (80) கை கால் கயிறால் கட்டி போட்ட நிலையில் இறந்து கிடந்தார் . அவரது கழுத்து பகுதியில் காயம் இருந்தது . வாயில் துணி வைத்து அடைத்து இருந்தனர்.இது தொடர்பாக…

Read More

கோவையில் ஓட்டுக்கு பணம்: தேர்தல் செயலியில் புகார் பெற பயிற்சி

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலமாக இஎஸ்எம்எஸ், சுவிதா, சி விஜில் இசிஐ நெட் வோட்டார் போன்ற செயலிகள் பயன்படுத்தும் முறை தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கு இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி தரப்பட்டது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொழில் நுட்ப பிரிவினர் , தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி தாசில்தார் தணிகைவேல் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த செயலிகள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு…

Read More

கோவையில் துணை ராணுவ படை கொடி அணிவகுப்பு..!

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடு நடக்கிறது. தேர்தல் பணிக்காக துணை ராணுவ படையான சிஆர்பிஎப் வீரர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர். இவர்கள் வெள்ளலூரில் சிஆர்பிஎப் வளாகத்தில் தங்கியுள்ளனர். நேற்று துணை ராணுவ படையினர் 144 பேர் தேர்தலுக்கான கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பு சுந்தராபுரம் சங்கம் வீதியில் துவங்கி சாரதா மில் ரோடு, போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் வரை 2.7 கி.மீ தூரம் நடந்தது. இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன்,…

Read More

கோவை வெள்ளிங்கிரி மலையில் 5 ஆண்டில் 40 பேர் சாவு..!

தென்கைலாயம் என அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை மலையேற்றத்திற்கு பிரசித்தி பெற்றது. ஆண்டுக்கு வரும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை சுமார் 5 லட்சம் பேர் மலை ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஏழுமலைகளை ஏறி கிரி மலையை அடைய வேண்டும். மலை ஏறி இறங்க சுமார் எட்டு மணி நேரம் தேவைப்படும். நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள நபர்கள் மட்டுமே தடையின்றி மலை ஏற முடியும். ஆனால் போதுமான உடல் திறன்…

Read More

கோவையில் ஜிடி நாயுடு சிலை திறந்தார் தமிழக முதல்வர்..!

தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள். நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இயந்திரவியல் மற்றும்…

Read More

கோவையில் ரேஷன் கடைகளில் மோடி படம்: தடையை மீறி போராடிய 49 பாஜகவினர் கைது..!

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது . மோடி அரசு மூலமாக ரேஷன் கடைகளுக்கு மாதம் இரண்டு லட்சம் டன் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விவரங்களை மறைத்து தமிழக அரசு தானே ரேஷன் பொருட்களை வழங்குவது போல் காட்டிக் கொண்டிருக்கிறது. அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எனவே மத்திய அரசின் திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ரேஷன் கடைகளில் பிரதமர்…

Read More