கோவை மாவட்டத்தில் வரும் ஆகஸ்டில்மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி …

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய அரசு, மாநில அரசின் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் பங்கேற்றனர். எப்படி கணக்கெடுப்பு நடத்துவது, என்ன கேள்விகள் கேட்பது என இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை வரும் 2027ம் ஆண்டில் தான் நடத்த போகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் முதல் கட்டமாக வீட்டு கணக்கெடுப்பு பணி நடத்தப்படும்….

Read More

கோவை மாவட்டத்தில் மின்சார ரீடிங் எடுக்க ஆள் பற்றாக்குறை…

கோவை மாவட்டத்தில் மின் வாரியத்தில் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர், உதவியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் 60 சதவீதம் காலியாக இருப்பதாக தெரிகிறது. காலியிடம் பூர்த்தி செய்ய மின்வாரிய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் காலி பணியிடம் நிரப்பவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கோவை சரகத்தில் சுமார் 6 ஆயிரம் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. மின் வாரியத்தில் அவுட் சோர்ஸ் மூலமாக கூட காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால் மின் வாரிய பணிகளில் விதிமுறை…

Read More

கோவை மாநகராட்சி பள்ளிகளில் அட்மிஷன் மறுப்பதாக புகார்…

கோவை மாநகராட்சியில் 84 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் கடந்த ஆண்டு விட நடப்பு கல்வியாண்டில் கூடுதல் மாணவ மாணவிகளை சேர்க்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு வழங்கியது. ஆனால் சில பள்ளி நிர்வாகங்கள் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்துவதில்லை. மாறாக மாணவர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீவிரம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக ஒப்பணக்கார வீதியில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2000 மாணவிகள் கல்வி கற்று வந்தனர். இந்த பள்ளியில் கடந்த…

Read More

கோவை சத்தி ரோடு NHAI வசம் விரைவில் ஒப்படைப்பு…

கோவை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் சத்தி மெயின் ரோடு இருக்கிறது. இதில் புளியம்பட்டி முதல் பொள்ளாச்சி ரோடு ஈச்சனாரி கற்பகம் கல்லூரி வரை உள்ள என்.எச் 948 என்ற ரோட்டில் 53 கி.மீ. தொலைவில் உள்ள பிரதான பாதை தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது சத்தி மெயின் ரோட்டில் 40 கோடி ரூபாய் செலவில் கணபதி டெக்ஸ்டூல் பாலம் முதல் சரவணம்பட்டி வரை 3.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க…

Read More

போலீஸ் விசாரணை எப்படி இருக்கு… கோவை கலெக்டர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள், சட்ட விரோத செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. மக்கள் போலீஸ் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்து கலெக்டரிடம் அதிரடியாக புகார் கூறி வருகிறார்கள். குறிப்பாக இட பிரச்னையில் போலீசார் அத்துமீறி செயல்படுகிறார்கள். சிவில் விவகாரத்தில் தலையிட கூடாது என உத்தரவு இருந்தாலும் அதை சட்டம் ஒழுங்கு பிரச்னை, தகராறு, மோதல் விவகாரம் என மாற்றி விசாரிக்க அழைத்து போலீசார் அத்து மீறி வருவதாக தெரிகிறது. மேலும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தால்…

Read More

கோவை குளங்கள் குத்தகையில் அபகரிப்பு…

கோவை மாவட்டத்தில் 32 குளங்கள், 20 தடுப்பணை இருந்தது. இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த அம்மன் குளம், மண்ணரை குளம் உட்பட 4 குளங்கள் பயன்பாடின்றி அழிந்து போனது சில குளங்களின் நீர் தேக்க பரப்பு குறைந்து வருகிறது. 38 ஏக்கர் பரப்பிலான அம்மன் குளம் பொதுப்பணித்துறை வசம் இருந்து குடிசை வாரியத்தின் வசம் ஒப்படைக்கபட்டு, அங்கே 2,350 வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீர் தேக்க குளம் என்ற அடையாளத்தை அம்மன் குளம் இழந்து…

Read More

கோவையில் பென்சன் கேட்டு 106 வயது பாட்டி புகார்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 106 வயதான வள்ளியம்மாள் என்பவர் நடக்க முடியாத நிலையில் வீல் சேரில் வந்து புகார் மனு அளித்தார். அப்போது அவர் தனது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக வேலை செய்தார் . அவருக்கு தற்போது 13 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வருகிறது . குடும்ப பென்ஷன்…

Read More

பானை செய்ய களிமண் தருவாங்களா.. தொழிலாளர்கள் புகார்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க நாள் கூட்டம் இன்று நடந்தது . இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் . இந்த கூட்டத்தில் ஆனைமலை பகுதியை சேர்ந்த மகாலிங்கம் உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் நாங்கள் மண் பானை தொழில் செய்து வருகிறோம். கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குயவன் குட்டையில் களிமண் எடுத்து வருகிறோம் . கடந்த…

Read More

தரையை தொட்டது சிறுவாணி நீர்மட்டம்… அடுத்த மாதம் 21ம் தேதி வரை மட்டுமே குடிநீர் இருப்பு…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 15 மீட்டர் அதாவது 49.53 அடி . இதில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 8.66 அடி மட்டுமே இருந்தது. நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தினமும் 3.8 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெற அனுமதி இருந்தும் நீர் மட்டம் பாதாளத்தை எட்டியதால் 38 சதவீத…

Read More

ஊட்டி பஸ் எப்ப வருமோ… கடுப்பில் காத்திருக்கும் பயணிகள்..

கோவை மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் கடந்த 2010ம் ஆண்டு 8 கோடி ரூபாய் செலவில் கட்டி திறக்கப்பட்டது. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், நீலகிரி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், முதுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கும் வகையில் இந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் துவக்க காலம் முதலே பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து முறையாக இயக்கப்படவில்லை. குறிப்பாக கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் வெளியே நின்று பயணிகளை ஏற்றி…

Read More