கோவையில் பென்சன் கேட்டு 106 வயது பாட்டி புகார்…!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது.
இதில் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 106 வயதான வள்ளியம்மாள் என்பவர் நடக்க முடியாத நிலையில் வீல் சேரில் வந்து புகார் மனு அளித்தார். அப்போது அவர் தனது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக வேலை செய்தார் .
அவருக்கு தற்போது 13 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வருகிறது . குடும்ப பென்ஷன் என்ற முறையில் அந்த தொகையை நான் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.80 வயது கடந்தவர்களுக்கு கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும் என விதிமுறை உள்ளது . நான் கடந்த 26 ஆண்டுகளாக கூடுதல் பென்ஷன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
இதுவரை அதிகாரிகள் தரவில்லை. யார் வந்தாலும் உங்களுக்கு இவ்வளவு வயசு ஆயிடுச்சா. எப்படி இருக்கிறீர்கள் என விசாரிக்கிறார்கள். ஆனால் பென்சன் தொகையை தர மறுக்கிறார்கள்.
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பென்ஷன் வாங்கி தர வேண்டும் என தெரிவித்தார்.
