ஊருக்குள் உலாவுது சிறுத்தை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது .இதில் மாற்றுத்திறனாளியான தெய்வானை (40) என்பவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், எனக்கு திருமணம் ஆகி கணவர் இருக்கிறார். எங்களுக்கு சொந்தமாக வீடு எதுவும் கிடையாது. அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் திண்ணையில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என தெரிவித்தார். மலுமிச்சம்பட்டி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த மாற்று திறனாளி வேல்முருகன் (37)…

Read More

தங்க மோசடிக்காரர் கைது: 240 கிராம் தங்கம் பறிமுதல்

உர்வாஸ்டோர், சிலிம்பி, குஜ்ஜாடி சேம்பர் பகுதியில் உள்ள ஸ்வர்ணா ஜுவல்லர்ஸ் கடைக்கு, நவம்பர் 21ஆம் தேதி மாலை, தன்னை அருண் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் ஒருவர் வந்தார்.“22ஆம் தேதி பேஜாய் காபி கட பகுதியில் உள்ள அஜந்த் பிசினஸ் சென்டரில் விருந்தினர்களுக்கு தங்க பிஸ்கட்டுகள் வழங்க வேண்டி உள்ளது. 10 கிராம் எடையுள்ள 24 தங்க பிஸ்கட்டுகள் வேண்டும்,” என்று தெரிவித்த அவர், வடிவத்தைத் தேர்வு செய்து, மறுநாள் மதியம் 12 மணிக்கு அலுவலகத்திற்கு கொண்டு வரும்படி…

Read More

நடிகை சமந்தா காதல் திருமணம்

பிரபல நடிகையான சமந்தா இன்று கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்திருந்தார். இவருடன் பேமிலி மேன் உட்பட பல்வேறு படங்களை இயக்கிய சினிமா படம் இயக்குனர் ராஜு நிதிமோரு வந்திருந்தார். இவர்கள் இருவரும் யோக மையத்தில் திடீர் திருமணம் செய்து கொண்டனர். சமந்தா ஏற்கனவே பிரபல தெலுங்கு சினிமா நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்திருந்தார். பின்னர் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில்…

Read More

மனைவியை கொலை செய்து ‘வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்’ வைத்த கணவர் கைது..

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பிரியா (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஸ்ரீபிரியா திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வேலை தேடி கோவை வந்தார். கோவையில் தனியார் நிறுவனத்தில் இவர் ஊழியராக வேலை செய்து வந்தார். காந்திபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீபிரியாவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ள…

Read More

வெள்ளரிக்காய் விளைச்சல் ஆஹா ஓஹோ…

கோவை மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பசுமைக்குடில் அமைத்து, உயர் தொழில்நுட்ப நீரியல் வளர்ப்பு முறையில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளதை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயி செல்வராஜ் என்பவரின் தோட்டத்தில் 16.88 லட்ச ரூபாய் மானியத்துடன் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப பசுமை குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்துள்ளதை கலெக்டர் பார்வையிட்டார். இதில் தோட்டக்கலை துணை இயக்குநர் சித்தார்த்தன், நேர்முக…

Read More

5 வருவாய் கிராமம், 4 பிர்க்கா ரெடி

கோவை மாவட்டத்தில் 3 கோட்டம், 11 தாலூகா, 295 வருவாய் கிராமங்கள் இருக்கிறது 11 பிளாக், 228 பஞ்சாயத்து ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 37 பேரூராட்சிகள் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பரப்பளவு 4723 சதுர கி.மீ. மக்கள் தொகை கடந்த 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 34,58,045 ஆக இருக்கிறது. மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் பணிகளை வேகமாக முடிக்கும் வகையில் வருவாய் கிராமங்கள் உள் வட்டங்களை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் படி, கோவை மாவட்டத்தில் 5…

Read More

ஆதார் சேவா கேந்திரா மார்ச் மாதம் வருது..

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகம், தாலூகா அலுவலகங்கள், 22 இ சேவை மையங்கள், 55 தபால் அலுவலங்கள் போன்றவற்றில் ஆதார் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக ஆதார் பதிவு மையங்களில் கூட்டம் அதிகமாகி வருகிறது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஆதார் சேவைகள் செய்யப்படுவதால் மக்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் பொதுமக்கள் பலர் உள்ளூரில் உள்ள ஆதார் பதிவு மையங்களை விடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம்,…

Read More

சபரிமலை சீசனால சரக்கு விற்பனை குறையுதா..

கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கிறது. ஒவ்வொரு கடைகளின் மூலமாக தினமும் 2 லட்ச ரூபாய் 5 லட்ச ரூபாய் வரை மதுபானம் விற்பனையாகி வருவதாக தெரிகிறது. சமீப காலமாக டாஸ்மாக் கடைகளின் விற்பனை சற்று குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. தினசரி மதுபான விற்பனையை டாஸ்மாக் நிர்வாகத்தினர் தங்களது விற்பனை சர்வர் விவரங்களில் காண முடியும். தற்போதைய சூழலில் மதுபான விற்பனை குறைந்து வருவதாக தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்தினர், ஆய்வு நடத்தினர் . எந்த…

Read More

வெள்ளலூர் பேரு எப்படி வந்துச்சு தெரியுமா..

கொங்கு நாட்டின் சிறப்பு மிக்க ஊர்களில் வேளீர் ஊர் குறிப்பிடத்தக்கது. 1842, 1871, 1932ம் ஆண்டில் இந்த ஊரில் பூமியில் பல்வேறு இடங்களில் புதையல் கிடைத்தன. ஒரு இடத்தில் கிடைத்த புதையலில் 1212 ரோமானிய காசுகள் இருந்தன. அகஸ்டஸ். திபிரியஸ் காலத்தை சேர்ந்த இந்த காசுகளை தொல்லியல் ஆராய்ச்சி துறையினர் சேகரித்து பாதுகாத்து வருகின்றனர் . இந்த காசு முதல் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது . இதன் மூலமாக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய…

Read More

எஸ் ஐ ஆர் வேலை ரொம்ப வேகமா போகுதுங்க..

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் (எஸ்ஐஆர்) நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 3117 ஓட்டு சாவடிகள் இருக்கிறது. சுமார் 32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஒரு ஓட்டு சாவடிக்கு ஒரு பூத் லெவல் ஆபீசர் (பிஎல்ஓ) என நியமிக்கப்பட்டு தேவையான படிவங்களை தேர்தல் பிரிவினர் வழங்கியுள்ளனர் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று படிவங்களை வழங்கி பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட அளவில் இந்த பணிகள் நடக்கிறது. வரும் டிசம்பர் 4ம்…

Read More