கோவை மாவட்டத்தில் ‘ஆதிதிராவிடர் காலனி’ என ரசீது வழங்கிய அதிகாரிக்கு நோட்டீஸ்…!
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குட்பட்ட வடவள்ளி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி என்று குடிநீர் கட்டண ரசீது வழங்கியுள்ளது . வடவள்ளி செயல் அலுவலர் குடிநீர் கட்டணம் செலுத்திய பொதுமக்களுக்கு 23.03.2026 தேதியில் ரசீது வழங்கியுள்ளார். அதில் வேலப்பநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் காலனி என்று குறிப்பிட்டு ரசீது வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் வரப்பெற்ற தகவலின் பேரில், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல ஆணையம் தாமே முன் வந்து இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அரசாணை (நிலை)…
