கோவை மாநகராட்சி கஜானாவை காலி செய்யும் ஆகாய தாமரை…!
கோவை மாநகராட்சியின் கட்டுபாட்டில் உள்ள உக்கடம் வாலாங்குளம், பெரிய குளம் படகு துறையாக செயல்படுகிறது. பூங்கா, வாக்கிங் தளம் என ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையமும் அமைத்து பயன்பாட்டிற்கு வந்தும் இந்த குளங்களில் துர்நாற்ற பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. கோவை அரசு மருத்துவமனை கழிவு, சாக்கடை, பல்வேறு நிறுவனங்களின் கழிவுகள், நகரின் தெற்கு, மத்திய பகுதி சாக்கடைகளின் சங்கமமாக இந்த இரு குளங்களும் இருக்கிறது. இங்கே கழிவு நீரை சுத்திகரிக்க பல கோடி…
