கோவையில் பார்சலில் போதை, வெடி பொருட்கள் சப்ளை ஆகிறதா… போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!
கோவை மாநகர காவல் துறை சார்பாக, மாநகரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு பார்சல் டெலிவரி செய்யும் நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கொரியர் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பார்சல்கள் பெறப்படும் மற்றும் சேமிக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக பொருத்தப்பட்டு, அதன் பதிவுகள் குறைந்தது 30 நாட்கள் பராமரிக்கப்பட…
